இடுகைகள்

கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காஃப்கா நுண்மொழி-39

படம்
காஃப்கா நுண்மொழி -39 “ தீமைக்கான விலையை ஒருவன் அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்க முடியாது . ஆனாலும் அவன் தொடர்ந்து முயன்று கொண்டேதான் இருக்கிறான் . மாவீரன் அலெக்சாண்டர் தன்னுடைய இளமைக்கால வெற்றிகள், அவன் உருவாக்கிய பிரம்மாண்டமான போர்ப்படை , இந்த உலகை மாற்றி விடுவதற்கான ஆற்றல் கொண்ட உத்வேகம் , யாவும் இருந்தும்கூட அவன் ஹெலஸ்பாண்ட் என்ற கால்வாயை கடக்காமல் தனது பயணத்தை நிறுத்தி இருப்பார் என்பது யூகிக்கத் தக்கது . அது அவனுடைய பயத்தினால் அல்ல, திடமற்ற     முடிவினால் அல்ல, பலவீனத்தினாலும் அல்ல ஆனால்   அவனுடைய சோர்ந்த கால்களினால் கூட இருக்கலாம் .” என் எண்ணம் : தீமைக்கான விலையை நாம் அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்க முடியாது என்று சொல்லும்போது பாவத்தின் சம்பளம் மரணம் என்கிற பைபிள் சொற்றொடர் நினைவுக்கு வருகிறது . அப்படி என்றால் தீமைக்காண விலை என்பது மொத்தமாக நாம் கொடுக்கப் போகிற மரணம் என்று பொருள்படுகிறது . ஒவ்வொரு தீமைக்கும் அவ்வப்போது விலைகொடுத்து நாம் அதை சரி செய்துவிட முடியாது , முதலிலேயே மொத்தமாக கொடுப்போம் என்று காஃப்கா சொல்கிறார் .   அதாவது ஒருவன் தீமையின் ப...

காஃப்கா நுண்மொழி-35

படம்
காஃப்கா நுண்மொழி-35 “பேறு என்றெதுவும் இல்லை, ‘இருத்தல்’ மட்டுமே.   கடைசி மூச்சிற்கும், மூச்சு திணறலுக்கும் ஏங்கும் ‘இருத்தல்’ மட்டுமே.” என் எண்ணம்:     மனிதன் வாழ்நாள் முழுவதும், பொருள் வளத்தை மேம்படுத்திக் கொள்ளவும், அதனால் பல விஷயங்களை தனது ‘உடைமை’ யாக்கிக் கொள்ளவும் பெருமுயற்சி எடுக்கிறான்.   செல்வப் பேறு மட்டும் அல்ல, நல்ல பெயர், புகழ்ச்சி, புண்ணியம், சுற்றம் என்று எல்லாவற்றிற்கும் போராடுகிறான்.   ஆனால் ஒரு கட்டத்தில், உடல் நலமற்றுப் போய், உடலுடன் போராடி, உயிருடன் போராடி சிரமம் தாங்காமல் எப்போது மரணம் தழுவும் என்று ஏங்கும் போது, ‘பேறு’ என்று எதுவும் இல்லை, இருத்தல் மட்டுமே தொடர்கிறது.   அப்போதைய ஏக்கம், கடைசி மூச்சிற்கானதாகவும், மூச்சுத் திணறலுக்கானதாகவும் இருக்கிறது.     முந்தைய நுண்மொழியில் எடுத்துரைத்த ‘அயர்ச்சி’யை தொடர்ந்து காஃப்கா இருத்தல் குறித்து பேசுகிறார். அந்த அயர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட விரக்தியில் இந்த நுண்மொழி தோன்றியிருக்கலாம். ‘இருத்தலின்’ நோக்கம் ‘இல்லாமல் போவது’ என்று நேரிடையாக புரிந்தாலும்,   கடைசி மூ...

காஃப்கா நுண்மொழி-34

படம்
காஃப்கா நுண்மொழி-34   “தனது அலுவலகத்தின் ஒரு மூலையில் வெள்ளையடித்துவிட்டு அவன், போருக்குப் பின்னான ஒரு தளபதியைப் போல் அயர்ந்துவிடுகிறான்”   என் எண்ணம்:     நானும் பார்த்திருக்கிறேன்.  நான் பார்க்கிற வேலைதான் மிகுந்த கடினமானதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இருக்கிறது என்று இறுமாந்ததுண்டு.  அதே நேரம் உடன் இருக்கிற (சும்மாவே இருக்கிற) சக, கீழ் நிலை ஊழியர்களும் தங்களது வேலைதான் சிரமம் நிறைந்தது என்று அலுத்துக் கொள்வார்கள்.  சும்மா இடுப்பில் கைவைத்துக் கொண்டு மேஸ்திரி வேலை பார்க்கிற மேலதிகாரிகளும் அதே போல்தான் அலுத்துக் கொள்கிறார்கள்.     உங்களுக்கென்ன, மாசம் பொறந்த சம்பளம், நாங்க அப்படியா ஓடியாடி உழைச்சாதான் காசு பாக்கமுடியும் என்று அலுத்துக்கொள்ளும் நண்பர்களும் உண்டு.     வெள்ளையடிக்கிற மனிதனின் அயர்ச்சியும் நியாயமானதுதான்.  அவனது உழைப்பும் அயர்ச்சியும் யாராலும் பாராட்டப்படுவதில்லை.  ஒருவனது உழைப்பு என்று சொல்லும் போது அது போர்வீரனின் உழைப்பிற்கு இணையானதுதான்.  இருவரும் உழைக்கிறார்கள்.  ஆனால் ...

காஃப்கா நுண்மொழி-30

படம்
காஃப்கா நுண்மொழி-30  “நற்குணம் என்பது ஒருவகையில் வசதியற்றது”   என் எண்ணம்:        என் தந்தை, ஜெயந்தன் கூறக் கேட்டிருக்கிறேன், “நல்ல குணம் என்பதொரு விலங்கு” என்று.   சில பல வாழ்க்கை நிகழ்வுகளில், நேரங்களில் அதை உணர்ந்திருக்கிறேன்.   நல்லவனாக வாழ முயற்சிக்கும் மனிதர்களுக்கு இது சட்டென்று ‘ஆம்’ என்று படும்.      நல்லவன், சாலையோரம் சுவற்றில் சிறுநீர் கழிக்க முடியாது.      நல்லவன், குடும்ப பிரச்சினைக்குக் கூட, வீட்டிற்குள் யாருடனும் சண்டை, சத்தம் போட முடியாது.      ஒரு அவசரத்திற்கு யாரிடமும் கடன் கேட்டுக் கை நீட்ட முடியாது.   கொடுத்த கடனை திரும்ப கேட்க முடியாது.      அதிகாரத்திற்கு எதிராக வாய் திறக்க முடியாது.      ஆசையில் காதலிக்கு முத்தம் கொடுக்க அவசரப்பட முடியாது.      ஓடிப் போய் அவசரத்திற்கு நகரும் பேருந்தில் ஏற முடியாது.      ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும், கேள்வி கேட்க முடியாது. ...

காஃப்காவின் நுண்மொழி-29

படம்
காஃப்காவின் நுண்மொழி -29     “ தீமையை உள்வாங்கிக் கொள்வதற்கான உனது தரம் தாழ்ந்த நடவடிக்கைகள் உண்மையில் உன்னுடையது அல்ல .  அவை தீமையினுடையவை .”     “ தனது எஜமானனைப் போலாக வேண்டும் என்று , அவன் கரத்திலிருந்து சவுக்கைப் பிடுங்கி தன்னை தானே அடித்துக் கொள்ளும் மிருகம் – பாவம் அதற்குத் தெரியாது , அந்த சவுக்கிலிருக்கிற புதிய முடிச்சு செய்யும் ஜாலம் இதுவென்று .” என் எண்ணம் :     புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வது ஒரு இழிவான செயல் .  எஜமானன் கையில் சவுக்கு இருப்பதால்தான் அவன் எஜமானன் என்று நினைத்து , அச்சவுக்கால் அடிமை தன்னைத் தானே அடித்துக் கொள்வது முட்டாள்தனம் .  சவுக்கு உன்னுடையதில்லை,  ‘ தீமை ’ யினுடையது என்கிறார் காஃப்கா .     தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதேயாம்   –   தீயார் குணங்களுரைப்பதுவும் தீதே யவரோ      டிணங்கி யிருப்பதுவுந் தீதே .
படம்
காஃப்கா நுண்மொழி-28     “தீமையை நாம் ஒருமுறை அனுமதித்துவிட்டால், பிறகு எப்போதுமே தன்னை நம்பவேண்டும் என்று அது நம்மை வற்புறுத்துவதில்லை” என் எண்ணம்:     ருசி கண்ட பூனை என்று நம்மிடம் ஒரு பழமொழி இருக்கிறது.     எத்தவொரு தீமையும், அதை நாம் ஒப்புக்கொள்ளும் வரைதான் தீமையாகத் தெரியும்.   ஒருமுறை ருசி கண்டுவிட்டால், தீமை காட்டும் மயக்கம், அது தரும் சௌகரியம், அது தரும் அதிகாரம், அதனால் விளையும் வளமை என ஆசைகாட்டி தீமை நம்மை இழுத்து தன் சிறையுள் அடைத்துவிடும்.   தீமை தரும் போதையிலிருந்து விடுபட முடியாது.     சாத்தான் ஒரே ஒருமுறைதான் ஆப்பிளை உண்ணும்படி ஏவாளைத் தூண்டியது.   பிறகு அவர்களுக்கு சொர்க்கத்தில் இடமளிக்கப்படவில்லை.     காஃப்கா தீமையை நாம் ‘செய்தால்….. ’ என்ற வினைச்சொல்லை பயன்படுத்தவில்லை. தீமையை நாம் ஒருமுறை அறிந்தால் அல்லது அங்கீகரித்தால் போதும் மறுமுறை அது தன்னை நம்ப வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை என்கிறார்.   அத்தனை எளிதாக நம்மை பற்றிக் கொள்ளக்கூடியது ‘தீமை’.   நாம் தீங்கு...

காஃப்கா நுண்மொழி-27

படம்
காஃப்கா நுண்மொழி-27     “நேர்மை நம்முள் விதைக்கப்பட்டிருக்கிறது.   தீமையைச் செய்யுமாறு நமக்கு போதிக்கப்படுகிறது”.   என் எண்ணம்:     ஒரு குழந்தை பிறக்கும்போது நல்லவனாகவே பிறப்பதாகவும், பிறகு அவனுள் திணிக்கப்படும் கற்பிதங்களினாலேயே அவன் நல்லவனாகவோ தீயவனாகவோ மாறுகிறான் என்பது காலங்காலமாக நாம் நம்பி வந்திருக்கிற கருத்துரு.   காஃப்காவின் கருத்தில், நேர்மை பின்னாட்களில் போதிக்கப்படுவதே இல்லையா என்ற கேள்வி எழுகிறது.     இக்கருத்துக்கள் அறிவியல் வளர்ச்சிக்குப் பின் மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றன என்றே நினைக்கிறேன்.     ஒவ்வொருவடைய ஜீன்களிலும், டி.என்.ஏ.களிலும் பெற்றோருடைய குணாம்சங்கள் கடத்தப்படுகின்றன.   பிறகு சமூக சூழ்நிலையால் ஒவ்வொரு குணமும் தூண்டப்பட்டு அவை நடைமுறைக்கு வருகின்றன. நமது வாழ்க்கை முறையில் நல்லது கெட்டது என்பது, கறுப்பு வெள்ளை போன்று தெளிவான வரையறைகள் கொண்டது அல்ல.   ஒருவனுக்கு நல்லதாகப்படுவது, இன்னொருவனுக்கு கெட்டதாகப் படுகிறது. ‘கருமி’ என்பது போன்ற குணாம்சங்கள் நல்லதா கெட்...

காஃப்கா நுண்மொழி-26

படம்
காஃப்கா நுண்மொழி-26      “ஒளிந்து கொள்வதற்கான மறைவிடங்கள் ஏராளமாய் இருக்கின்றன.   ஆனால் இரட்சிப்பு ஒன்றே ஒன்றுதான்.   இரட்சிப்பிற்கான சாத்தியங்கள் மறைவிடங்களைப் போல் ஏராளம்.   கடைவழிக்கான பாதை ஏதுமில்லை, ஆனால் அப்பாதை தயக்கங்களால் ஆனாது”. என் எண்ணம்:         பாதை குறித்த முந்தைய நுண்மொழிகளை நினைவுபடுத்தி இதற்கு பொருள் தேட வேண்டியுள்ளது.   குறிப்பாக, 15வது நுண்மொழி, சருகுகளால் மூடப்படும் பாதை.           கடைவழிக்கான பாதையில் முயற்சியை கைவிட்டு நாம் ஒளிந்துகொள்வதற்கான இடங்கள், காரணங்கள், காரணிகள் நிறைய உள்ளன.   நம்மை திசை மாற்றும் பொய்யான பாதைகள் அவை.   கடைவழிக்கு உண்மையான பாதை ஒன்றே ஒன்றுதான்.   நின்று கொண்டிருக்கும் இடத்தில் உன் பாதங்களின் அளவே தெரியும் பாதைதான் தற்போதைக்கு உண்மை (நு.மொ.25) கடைவழிக்கு பாதை ஏதுமில்லை.   அதாவது அப்பாதை சருகுகளால் மூடப்பட்டிருக்கிறது.   சருகுகளை நீக்கி அப்பாதையை கண்டுணர வேண்டியுள்ளதால், அப்பயணம் தயக்கங்களால் நிரம்பியுள்ள...

காஃப்கா நுண்மொழி-25

படம்
காஃப்கா நுண்மொழி-25     “வாழ்வை நோக்கி முன்னேறுவதைத் தவிர வேறு எப்படி நாம் வாழ்வை கொண்டாடிவிட முடியும்?” என் எண்ணம்:     தேர்வுக்கு படிப்பதைத் தவிர வேறு எப்படி தேர்வின் முடிவை கொண்டாடிவிட முடியும்?   முயற்சியும் விளைவும், இரண்டும் நேர்திசையில் நகர்வன அல்லவா?   சரி, இது சிறிய எடுத்துக்காட்டு.     ஆனால், வாழ்வில் இரண்டும் உண்டு, ஒன்று வாழ்வில் இருந்து விலகுதல், இராண்டாவது வாழ்வை நோக்கி நகர்தல்.   முற்றும் துறத்தல் இந்த வாழ்வினின்று நீங்கி முக்தியடைதல் என்கிற எல்லையற்ற ஆனந்தம் என்பது நமக்கு கற்பிக்கப்படுவது.     யாதனின் யாதனின் நோங்கியான் நோதல்     அதனின் அதனின் இலன் இந்த வாழ்வில் இருந்து விலகிச் சென்ற ஒருவன் மீண்டும் வாழ்வை நோக்கி பயணிக்கும் போது மகிழ்ச்சியடைகிறான். காஃப்கா, இதுவரை பார்த்த நுண்மொழிகளில் தொடர்ந்து பயணிப்பதை பற்றியும், யாரும் அடைய முடியாத எல்லைக் கோட்டை அடைவது பற்றியும், திரும்புதல் பற்றியுமே மீண்டும் மீண்டும் பேசுகிறார். சுருங்கச் சொன்னால், ‘நகர்தல்’ என்பது வாழ்வில் மக...

காஃப்கா நுண்மொழி-24

படம்
காஃப்கா நுண்மொழி-24     “உன் பாதங்களின் அளவைவிட, நீ நிற்கும் பூமியின் அளவு பெரிதாக இருந்துவிட முடியாது என்கிற உனது அதிர்ஷ்டத்தை பற்றிக்கொள்” என் எண்ணம்:     காஃப்கா இந்த பூமியில் நாம் நிற்பதே பெரும் அதிர்ஷ்டம் என்கிறார்.   நிற்பதற்கு மேல் எதையும் எதிர் பார்த்துவிடாதே என்பது தானே அவருடைய கருத்து!   இது ஒரு அடிப்படைவாதியின் கருத்தாக எனக்குப்படுகிறது.  தனது விடலைப் பருவத்தில் தன்னை நாத்திகவாதியகவும், சமத்துவ கொள்கை உள்ளவராகவும் அறிவித்திருக்கிறார். மூன்றடி மண் கேட்ட வாமனன் கதை, கற்பனையாக இருந்தால் கூட, விண்ணுக்கும் மண்ணுக்கு ம் அளந்து பிரமாண்டத்தை, பிரபஞ்சத்தை அளக்கச் சொல்கிறது.   அது கற்பனையின் எல்லையை விரிவாக்குகிறது. இவர் 1925 வரைதான் உயிருடன் இருந்தார் என்பதால் 1969-ல் மனிதன் நிலவில் கால் வைத்துவிட்டது தெரியாமல் போய்விட்டது. கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே பூமிக்கு வெளியே இடம் கேட்ட ஆர்க்கிமிடீஸ் வாழ்ந்திருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கக் கூடும். தனது தந்தையின் அதிகார கட்டுப்பாட்டிலேயே வளர்ந்த காலகட்டங்களில் இப்படியொரு எண்ணம் தோன்றியிரு...

காஃப்கா நுண்மொழி-20

படம்
காஃப்கா நுண்மொழி-20     ஆலயங்களின் பலிபீடத்திலிருக்கிற குடுவைகளில் உள்ள படையலை குடித்து தீர்க்கின்றன அத்து மீறும் சில சிறுத்தைகள்.   இவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து நிகழ்கின்றன.   பின்னாள் இவையும் கணக்கில் கொள்ளப்பட்டு, பிறகு அதுவும் ஒரு சடங்கின் பகுதியாகிறது. என் எண்ணம்: இந்த நுண்மொழியை படிக்கும் போது, நமக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கிற ஜென் கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு ஜென் துறவியும் அவரது சிஷ்யர்களும் தியானம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு பூனை சத்தம் போட்டுக்கொண்டே குறுக்கும் நெடுக்கும் அலைந்ததால், தியானத்திற்கு இடையூறாய் இருப்பதாய் கருதி அந்த துறவி ”பூனையைக் கட்டிப்போடுங்கள்” என்று உத்தரவிட்டார். சில ஆண்டுகள் கழித்து அந்த துறவி இறந்து விட்டார். ஆனாலும் அந்த பூனையைக் கட்டிப் போடும் பழக்கம் தொடர்ந்து கொண்டிருந் தது . மேலும் சில வருடங்கள் கடந்தன. அந்த பூனையும் இறந்து விட்டது. வேறொரு பூனை வரவழைக்கப்பட்டு கட்டி வைக்கப் பட்டது. பல ஆண்டுகள் கழித்து சீடர்கள் ,” நம் மத வழக்கப்படி பூனையை தியான நேரத்தில் கட்டி வைக்க வேண்டும்” என நூற்குறிப்புகள் எழுதி...

காஃப்கா நுண்மொழி-19

படம்
காஃப்கா நுண்மொழி-19      “தீமையின் இரகசியங்களை பாதுகாத்துவிட முடியும் என்று ‘தீமை’ வழங்கும் வாக்குறுதிகளை நம்பிவிடாதே” எனது எண்ணம்:      தன் நிலை காரணமாக, ஒரு சிறு தீமை செய்வதினால், நீ தீயவன் அல்ல என்று நினைப்பது ஒரு தவறான கண்ணோட்டம் என்பதை விளக்க முற்படுகிறார் காஃப்கா.   உன் அதிகாரத்தின் வலிமை காரணமாக, நீ செய்யும் ஒரு சின்ன தீமையை, நீ மறுக்கவோ   வேறு பெயரிட்டு அழைக்கவோ, திரித்து பேசவோ உன்னால் முடியும் என்றால் அது தீமை அல்ல என்றாகிவிடாது.   நீ அடிப்படையில் தீயவனாக இல்லாமல் அவ்வாறு செய்ய முடியாது.   ஆனால் அப்படியெல்லாம் தீமை உன்னை நம்ப வைக்கும்; நம்பிவிடக் கூடாது.   நன்மை என்பது கேட்டுப் பெற்று சொந்தம் கொண்டாடுவது அல்ல.   அது பொறுமையான அக்கறையினாலும் பகுத்தறிவதாலும் நிகழ்வது.      இன்றைய நிலையில், காரிய சாத்தியத்திற்காக ஒரு லஞ்சம் கொடுக்கிற சுயநலமி கூட லஞ்சம் என்பதை அங்கீரித்துவிட்டதால், எதிர்வினை இல்லை என்கிற தைரியத்தாலும், வெளியே தெரியாது, மாட்டிக்கொள்ள மாட்டோம் என்கிற நிலையாலும், அவன் செய...
படம்
காஃப்கா நுண்மொழி-18 “அந்த கோபுரத்தின் மேல் மனிதர்கள் ஏறாமல் கட்ட முடிந்திருந்தால், பேபல் கோபுரம் அனுமதிக்கப்பட்டிருக்கும்”   என் எண்ணம்: ‘பேபல் கோபுரம்’ என்பது விவிலிய கதைகளில் வருகிற ஒரு உருவகம்.   பெரு வெள்ளத்திற்கு பிறகு பிழைத்த மனிதர்கள் ஷினார் என்கிற இடத்தில் மிக உயரமான ஒரு கோபுரத்தை கட்டி அதில் தஞ்சம் புகுந்துவிட்டால் இன்னொரு முறை வெள்ளத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கட்டுகிறார்கள்.   அந்த கோபுரத்தின் உயரம் கடவுளின் உலகத்தை தொட்டுவிடுவதற்கான முயற்சியாகவும் இருக்கிறது.   பேபல் என்பதற்கு கூச்சல் அல்லது இரைச்சல் என்கிற பொருளும் காணப்படுகிறது.   அவர்களின் முயற்சியை முறியடிக்க, கடவுள் அவர்களுக்குள் பல மொழிகளை உருவாக்குகிறார்.   ஒருவருக்கொருவர் பேச முடியாமல் போவதால், அக்கோபுர கட்டுமானம் நின்று போகிறது. மனிதனது செயலுக்கு இது கடவுள் அளித்த தட்டணை என்று பார்க்கப்படுகிற இக்கதை, பின்னாளில் இது பல நாகரீகங்கள் உருவாக காரணமாக இருந்ததாகவும் பேசப்பட்டது. மேலே ஏறாமல் கட்டப்பட்டிருந்தால், அக்கோபுரம் அனுமதிக்கப்பட்டிருக்கும் என்கிறார் காஃப்கா. ...

காஃப்கா நுண்மொழி-16:

படம்
காஃப்கா நுண்மொழி-16:        “கூண்டு ஒன்று பறவை ஒன்றைத் தேடிச் சென்றது” எனது பார்வை: உள்ளே பறவை அடைக்கப்பட்டிருந்தால் தானே அது கூண்டு?   இது ஒரு முரண் தொகை.   உள்ளே பறவை அடைக்கப்படாததால் அது தனது கூண்டு என்கிற தன்மையை இழக்கிறது. எனது பள்ளி இயற்பியல் ஆசிரியர் ஒரு உதாரணம் சொல்லுவார்.   சைக்கிளில் பிரேக் இருக்கிறது.   அது எந்த இயக்கத்தை நிறுத்துகிறது?   அந்த பிரேக்கை கழட்டி தனியாக வைத்துவிட்டால், அது பிரேக் ஆகிவிடுமா?   அதை பிரேக் என்று நாம் சொன்னாலும், அதனால் எந்த ஒரு இயக்கத்தையும் தடை செய்ய முடியாது.   அது சைக்கிளில் இருக்கும் போது கூட, இந்த பூமியின் சுழற்சியை நிறுத்திவிடுகிறதா என்ன? அது போல, ஒரு கூண்டு தன்னுள் அடைபட்ட பறவை ஒன்று இல்லையென்றால் அது தன் தன்மையை இழக்கிறது.   அது தன்னை நிலை நிறுத்திக்கொள்ள, ‘தான்’ யாரென்று நிறுவிக்கொள்ள பறவை ஒன்றை தேடிச் செல்கிறது. பறவை கூட சுதந்திரமாய் பறந்து திரியும் வரைதான் அது பறவை.   சிறைப் பட்டுவிட்டால், அது உண்மையான அர்த்தத்தில் பறவையா? ஒரு பறவையை அதன் சுதந்திர பறத்தல் ...

காஃப்கா நுண்மொழி-13

படம்
காஃப்கா நுண்மொழி-13 “புரிதலின் முதல் மெல்லிய ஒளிக்கீற்று மரணத்திற்கான அவாவாக இருக்கிறது.   இவ்வாழ்க்கையே தாங்க வொண்ணாததாகவும் மறுவாழ்க்கை அடைய முடியாததாகவும் இருக்கிறது.   மரணத்திற்கான காத்திருத்தல் வெட்கப்பட வேண்டியதில்லை என்று உணர்கிறான்.   வெறுப்படைந்துவிட்ட பழைய கூண்டிலிருந்து, காலத்தால் மீண்டும் வெறுக்கத்தக்கதாய் மாறிவிடக் கூடிய புதிய கூண்டிற்குச் செல்வதற்கு விண்ணப்பிக்கிறான்.   இந்தக் கைதியை அழைத்துச் செல்லும் பாதையில் எதிரே வரும் எஜமானன், ‘இந்தக் கைதியை மீண்டும் சிறையில் அடைக்காதீர்கள், இவன் என்னுடன் வரத்தக்கவன்’ என்று கூறுவதற்கான கடைசிக்கீற்று நம்பிக்கையும் இருக்கத்தான் செய்கிறது.” மிக எளிதாய் புரிந்து கொள்ளக்கூடிய நுண்மொழி இது.   இம்மை, மறுமை, மரணம், கடவுள், சொர்க்கம் என்கிற மீண்டும் மீண்டும் நாம் கேள்விப்பட்டிருக்கிற விஷயங்கள்தான்.   அடைய முடியாத புதிய வீடுகூட நாளடைவில் வெறுக்கத் தக்கதாகவே இருக்கும் என்கிறார் காஃப்கா.   புதிய வீட்டிற்குச் செல்ல விண்ணப்பிக்கிற ஒருவன், ஏன் ‘விடுதலை’ குறித்தோ ‘முக்தி’ குறித்தோ விண்ணப்பிக்கவில்லை என்ற கேள்வி ...

காஃப்கா நுண்மொழிகள் – 11 & 12

படம்
காஃப்கா நுண்மொழிகள் – 11 & 12 “ ஒரு பொருளின் மீதான பார்வைகளுக்கு பலவிதமான வேறுபாடுகள் உண்டு.   உதாரணமாக, மேஜை மீதிருக்கிற ஆப்பிளை எட்டிப் பார்க்க ஒரு சிறுவன் தன் கழுத்தை கொக்கு போல நீட்ட வேண்டியிருக்கிறது.   ஆனால் அந்த வீட்டு எஜமானன் எளிதாக அதையெடுத்து தன் விருந்தாளிக்கு அளிக்கிறான்”.   இந்த நுண்மொழியை ஒரு ஓவியனுக்குரிய படிம கற்பனையோடு சொல்லியிருக்கிறார் காஃப்கா என்று மகிழ்கிறேன்.   ஒரே பொருள் வெவ்வேறு கோணங்களில், வெவ்வேறு எண்ணங்ளும், கருத்துக்களும் கொண்டவை என்று சொல்கிறார்.   ஒரு மேஜையின் மேலிருக்கிற ஆப்பிளை பார்க்கவே சிரமப்படுகிற ஒரு சிறுவனுக்கு அதை தின்ன வேண்டும் என்கிற ஆசையிருக்கிறது.   அதே வேளையில், அதை சுலபமாக கையில் எடுக்கக் கூடிய ஒருவர் அதை தின்னாமல் தனது விருந்தாளிக்கு அளித்து மகிழ்க்கிறார்.   அவரது எண்ண ஓட்டத்தில் சிறுவனின் ஏக்கம் இல்லை.   தானும் தின்னாமல் இன்னொருவருக்கு ஏன் கொடுக்கிறார் என்று சிறுவனும் வியக்கக்கூடும்.   அந்த ஆப்பிள் மேல் ஆர்வமும் ஆசையும் கொண்ட அந்த சிறுவன் ஏன் அதை எடுத்து தின்னவில்லை, அல்லது ஏன் தயங்குகிற...

Kafka Aphorisms - 10 & 11

படம்
காஃப்கா நுண்மொழி – 10 & 11      “தான் நல்லவன் என்கிற அகந்தையால் A என்கிற ஒருவன் மண்டை வீங்கித் திரிகிறான்.   அது என்றும் மயக்கம் தருகிறதொரு பெரிய மாயை என்பதறியாமல், அறிந்திராத பல சின்னசிறு மாயைகளுக்கும் ஆட்படுகிறான்.      உண்மை என்னவெனில், ஒரு பெரிய மாயப் பிசாசு அவனது மனதில் குடிகொண்டு விட்டதால், பல சிறிய பிசாசுகள், பெரியதற்கு சேவை செய்ய வரிசையாகப் பின்தொடர்கின்றன.”      தான் நல்லவன் அல்லது நல்ல எண்ணங்கள் கொண்டவன் என்பது கூட ஒரு அகந்தையாக மாறிவிடுகிறது. அப்படியொரு மயக்கம் தருகிற எண்ணம், தன்னையறியாமல் அதை தொடரும் பல மயக்கங்களக்கு உள்ளாகிறது.    அந்த அகந்தையை மாயப் பிசாசு என்கிறார் காஃப்கா.      ஒரு நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதன், தான் அப்படியிருக்கிறோம் என்கிற உள்மன அகந்தைகூட இல்லாமல் எப்படியிருப்பது?   ஆனால் அவன் மற்ற கேடுகள் தன்னை அண்டாமல் இருப்பதற்காக அந்த அகந்தையை வலுவேற்றுகிறான்.   அவனுக்குத் தெரிவதில்லை, ஒரு பிசாசு மற்ற பிசாசுகளை வரவேற்று மனதுள் குடியேற்றுகிறது என்று. ...

Kafka Aphorism-9

படம்
காஃப்கா நுண்மொழி – 9 “ஒரு நாற்றமெடுத்த நாய், பல குட்டிகளின் தாய், சின்ன வயதில் எனக்கு எல்லாமாக இருந்தது.   பின்னர் என்னால் அதை அடிக்காமல் இருக்க முடியவில்லை.   அதன் சுருங்கிவரும் உருவமும், துர்நாற்றமும், என்னை விலகச் செய்தது.   நான் வேறு முடிவு எடுக்காவிடில், அது என்னையொரு மூலையில் தள்ளி, என் மேல் விழுந்து பிராண்டி, அதன் சீழ் பிடித்த நாக்கால் நக்கி என்னை அழுகிச் சிதைவுறச் செய்யும். இது எனக்கு பெருமை அல்ல”.   ஒரு சிறிய அரூப -உருவகக் கதைப் போல் இருக்கிறது . வழக்கம் போல் மேலை வழக்கத்தின் அருவருப்பான ரசனை .   ரத்தமும் , சதையும் , சீழும் , புழுவும் என்று கற்பனை செய்வதும் எழுதுவதும் தான் தீவிர எழுத்து என்று இன்று பலரால் பார்க்கப்படுகிறது , எழுதப்படுகிறது .   சிறு வயதில் நமக்கு ஏற்படும் ஏதோ ஒரு பழக்கத்திற்கு இந்த நாயினை உருவகமாக பயன்படுத்தியிருக்கிறார்.   பின்னாள், அதன் சிதைவும், அதனால் ஏற்படும் அருவருப்புகளும் பாதிப்பைத் தருகின்றன.   அதனிடமிருந்து விலகாவிடில் ஏற்படப்போகும் சீரழிவும், அவமரியாதையும் என்னவென்பதை வாசிப்பவரின் கற்பனைக்கு விடுகிறார்.

Kafka Aphorism - 6

படம்
காஃப்கா நுண்மொழி-6 “மனிதகுல மேம்பாட்டிற்கான திடமான தருணங்கள் கைக்கெட்டும் தூரத்தில் பூத்துக்கிடக்கின்றன.   புரட்சி பேசும் இயங்கங்கள் தங்களுக்கு முந்தையவற்றை பொருத்தமற்றவை என்று புறந்தள்ளுதல் சரியானதே.   ஏனென்றால் அப்படியேதும் நடந்துவிடவில்லை.”   மாற்றங்கள் தேவையான தருணங்களில் பழைமைவாதங்கள் புறந்தள்ள தக்கவையே.    பழைய வழக்கமான பழக்க வழக்கங்கள் மீண்டும் மீண்டும் செயல்படுவதால் மாற்றங்கள் நிகழ்ந்துவிடப் போவதில்லை.   பழைமையில் நிகழ்த்தப்படும் சிறிய வித்தியாசம் கூட மாற்றத்தின் தோற்றம்தான்.   அதுவே மனிதனின் மேம்பாட்டிற்குத் தேவையான ஒரு புரட்சி தருணம் எனலாம்.

வருவிருந்து - கவிதை

சரியாக பத்து வருடங்கள் கழித்து எனது Blog எப்படியிருக்கிறது என்று பார்க்க வந்துள்ளேன்.   பரவாயில்லை உயிரோடு தான் இருக்கிறது. தொடரலாம். முதல் கவிதை- வருவிருந்து சாலையில் நடமாட்டமிருக்கிறது உறவு தேடும் மனம் தெருமுனை மேய்கிறது நிழலாடும் உருவில் கவசத்தில் ஒளியும் நட்பு மாமனோ அத்தையோ கதவை தட்டுவதாய் கனவு ஜோல்னாவுடன் பயணிக்கும் தந்தையின் ஆன்மா ஏதோ ஒரு மூலையில் துயில்வதாய் கண்கள் துழாவுகின்றன வீட்டில் மாயக் கோட்டையின் அஸ்திவாரமாய் சுண்ணாம்பு வட்டங்கள் பால் போடும் பையன் ஒரு கணம் நின்று சிரிப்பதில்லை பேப்பர் போடுகிறவன் மூஞ்சியில் விட்டெறிகிறான் வேலையாள் இல்லாமல் வீடு கிடக்கிறது உறைந்து சூறாவளியாய் சுழல்கிறது ஒரே இடத்தில் ஒரே செய்தி சூரியனும் பூமியும் சூரியனும் பூமியுமாய் தொடர ஒளிந்து தாக்கும் கயமை ஆறஅமர ஊர்ந்து படர்கிறது விக்கெட்டுகள் விழுந்த பிறகே பந்து வந்த திசை அனுமானமாகிறது ஹீலியம் பலூன் போல் - மகிழ்ச்சி அறுந்து வான்வெளியில் எங்கோ அலைந்து கொண்டிருக்கிறது சோற்று சுமை தூ...