வருவிருந்து - கவிதை

சரியாக பத்து வருடங்கள் கழித்து எனது Blog எப்படியிருக்கிறது என்று பார்க்க வந்துள்ளேன்.   பரவாயில்லை உயிரோடு தான் இருக்கிறது.

தொடரலாம்.

முதல் கவிதை-

வருவிருந்து


சாலையில் நடமாட்டமிருக்கிறது
உறவு தேடும் மனம்
தெருமுனை மேய்கிறது
நிழலாடும் உருவில்
கவசத்தில் ஒளியும் நட்பு
மாமனோ அத்தையோ
கதவை தட்டுவதாய் கனவு
ஜோல்னாவுடன் பயணிக்கும் தந்தையின் ஆன்மா
ஏதோ ஒரு மூலையில் துயில்வதாய்
கண்கள் துழாவுகின்றன வீட்டில்
மாயக் கோட்டையின் அஸ்திவாரமாய்
சுண்ணாம்பு வட்டங்கள்

பால் போடும் பையன்
ஒரு கணம் நின்று சிரிப்பதில்லை
பேப்பர் போடுகிறவன்
மூஞ்சியில் விட்டெறிகிறான்
வேலையாள் இல்லாமல்
வீடு கிடக்கிறது உறைந்து
சூறாவளியாய் சுழல்கிறது
ஒரே இடத்தில் ஒரே செய்தி
சூரியனும் பூமியும்
சூரியனும் பூமியுமாய் தொடர
ஒளிந்து தாக்கும் கயமை
ஆறஅமர ஊர்ந்து
படர்கிறது
விக்கெட்டுகள் விழுந்த பிறகே
பந்து வந்த திசை அனுமானமாகிறது
ஹீலியம் பலூன் போல் - மகிழ்ச்சி
அறுந்து வான்வெளியில் எங்கோ
அலைந்து கொண்டிருக்கிறது

சோற்று சுமை தூக்கும் தூதுவனை
படலுக்கு வெளியே நிறுத்துகிறோம்
முகந்திரிந்து நோக்க
அனிச்சம் வெட்கம் கெடுகிறது

கரோனா எழுதும் குறள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29