காஃப்கா நுண்மொழிகள் – 11 & 12

காஃப்கா நுண்மொழிகள் – 11 & 12


ஒரு பொருளின் மீதான பார்வைகளுக்கு பலவிதமான வேறுபாடுகள் உண்டு.  உதாரணமாக, மேஜை மீதிருக்கிற ஆப்பிளை எட்டிப் பார்க்க ஒரு சிறுவன் தன் கழுத்தை கொக்கு போல நீட்ட வேண்டியிருக்கிறது.  ஆனால் அந்த வீட்டு எஜமானன் எளிதாக அதையெடுத்து தன் விருந்தாளிக்கு அளிக்கிறான்”.

 

இந்த நுண்மொழியை ஒரு ஓவியனுக்குரிய படிம கற்பனையோடு சொல்லியிருக்கிறார் காஃப்கா என்று மகிழ்கிறேன்.  ஒரே பொருள் வெவ்வேறு கோணங்களில், வெவ்வேறு எண்ணங்ளும், கருத்துக்களும் கொண்டவை என்று சொல்கிறார்.  ஒரு மேஜையின் மேலிருக்கிற ஆப்பிளை பார்க்கவே சிரமப்படுகிற ஒரு சிறுவனுக்கு அதை தின்ன வேண்டும் என்கிற ஆசையிருக்கிறது.  அதே வேளையில், அதை சுலபமாக கையில் எடுக்கக் கூடிய ஒருவர் அதை தின்னாமல் தனது விருந்தாளிக்கு அளித்து மகிழ்க்கிறார்.  அவரது எண்ண ஓட்டத்தில் சிறுவனின் ஏக்கம் இல்லை.  தானும் தின்னாமல் இன்னொருவருக்கு ஏன் கொடுக்கிறார் என்று சிறுவனும் வியக்கக்கூடும்.  அந்த ஆப்பிள் மேல் ஆர்வமும் ஆசையும் கொண்ட அந்த சிறுவன் ஏன் அதை எடுத்து தின்னவில்லை, அல்லது ஏன் தயங்குகிறான் என்று நீங்கள் சிந்திக்கலாம்.  அல்லது அந்த எஜமான் ஏன் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்றும் தோன்றலாம்.  ஒரு பொருளின் மீதான பலரின் பல கோணங்கள், ஒற்றுமையாய் இருப்பதில்லை.  அவைகளே சிக்கல்களுக்கு காரணமாகின்றன.

 விவிலிய கதைகளோடு தொடர்பு உள்ளவர்கள் இக்கதையை ஆதாம் ஏவாள் சாப்பிட்ட ஆப்பிளோடும், அது தொடர்புடைய தத்துவங்களோடும் இதை தொடர்புபடுத்தி சிந்திக்கக் கூடும்.

ஆதாம் ஏவாளில் ஆரம்பித்து, நியூட்டன் வழியாக, ஸ்டீவ் ஜாப்ஸ் வரை ஆப்பிளின் வரலாறு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 இன்றைய தலைமுறையினருக்கு ஆப்பிள் என்றால் முதலில் மொபைல்தான் ஞாபகத்திற்கு வரும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29