காஃப்கா நுண்மொழி-28


    “தீமையை நாம் ஒருமுறை அனுமதித்துவிட்டால், பிறகு எப்போதுமே தன்னை நம்பவேண்டும் என்று அது நம்மை வற்புறுத்துவதில்லை”

என் எண்ணம்:

    ருசி கண்ட பூனை என்று நம்மிடம் ஒரு பழமொழி இருக்கிறது.

    எத்தவொரு தீமையும், அதை நாம் ஒப்புக்கொள்ளும் வரைதான் தீமையாகத் தெரியும்.  ஒருமுறை ருசி கண்டுவிட்டால், தீமை காட்டும் மயக்கம், அது தரும் சௌகரியம், அது தரும் அதிகாரம், அதனால் விளையும் வளமை என ஆசைகாட்டி தீமை நம்மை இழுத்து தன் சிறையுள் அடைத்துவிடும்.  தீமை தரும் போதையிலிருந்து விடுபட முடியாது.

    சாத்தான் ஒரே ஒருமுறைதான் ஆப்பிளை உண்ணும்படி ஏவாளைத் தூண்டியது.  பிறகு அவர்களுக்கு சொர்க்கத்தில் இடமளிக்கப்படவில்லை.

    காஃப்கா தீமையை நாம் ‘செய்தால்….. ’ என்ற வினைச்சொல்லை பயன்படுத்தவில்லை. தீமையை நாம் ஒருமுறை அறிந்தால் அல்லது அங்கீகரித்தால் போதும் மறுமுறை அது தன்னை நம்ப வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை என்கிறார்.  அத்தனை எளிதாக நம்மை பற்றிக் கொள்ளக்கூடியது ‘தீமை’.  நாம் தீங்கு செய்வதே இல்லை என்று பேசிக்கொண்டிருக்கும் போதே, தீங்கு செய்துகொண்டிருக்கிறோம் என்பதே ‘தீமை’யின் பாத்திர வடிவமைப்பு.

    தீயவை நம்முள் திணிக்கப்படுகிறது என்பது முந்தைய நுண்மொழி.  அதன் மறுபக்கம்தான் தீமையை நாம் அனுமதிப்பது.

    தீவினை அகற்று - ஔவையார்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29