காஃப்காவின் நுண்மொழி-29

காஃப்காவின் நுண்மொழி-29


    “தீமையை உள்வாங்கிக் கொள்வதற்கான உனது தரம் தாழ்ந்த நடவடிக்கைகள் உண்மையில் உன்னுடையது அல்லஅவை தீமையினுடையவை.”

    “தனது எஜமானனைப் போலாக வேண்டும் என்று, அவன் கரத்திலிருந்து சவுக்கைப் பிடுங்கி தன்னை தானே அடித்துக் கொள்ளும் மிருகம்பாவம் அதற்குத் தெரியாது, அந்த சவுக்கிலிருக்கிற புதிய முடிச்சு செய்யும் ஜாலம் இதுவென்று.”

என் எண்ணம்:

    புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வது ஒரு இழிவான செயல்எஜமானன் கையில் சவுக்கு இருப்பதால்தான் அவன் எஜமானன் என்று நினைத்து, அச்சவுக்கால் அடிமை தன்னைத் தானே அடித்துக் கொள்வது முட்டாள்தனம்சவுக்கு உன்னுடையதில்லை,  ‘தீமையினுடையது என்கிறார் காஃப்கா.

    தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதேயாம்  தீயார்

குணங்களுரைப்பதுவும் தீதே யவரோ

    டிணங்கி யிருப்பதுவுந் தீதே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5