காஃப்கா நுண்மொழி-37


இல்லாத ஏதோ ஒன்றை அவன் வைத்திருந்தான் என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போது அவனிடம் தடுமாற்றமும் நடுக்கமும் இருந்தது.

என் எண்ணம்

    ‘இல்லாத ஏதோ ஒன்றை அவன் வைத்திருந்தான்’ என்று கூறும் போது நுண்மொழி-35 லிருந்து தொடர்பு படுத்தி பார்க்க வேண்டியிருக்கிறது.  ‘‘வைத்திருத்தல்’ என்று ஏதும் இல்லை ‘இருத்தல்’ மட்டுமே ஏக்கம்” - என்பது தான் முந்தைய மொழி.  ‘இருத்தல்’ என்பதே ஏக்கம் ஆகிவிட்ட ஒருவனிடம், அவன் இல்லாத ஒன்றை வைத்திருந்தான் என்று குற்றம் சாட்டுவது, அவனிடம் தடுமாற்றத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்கிறார்.   ‘இருத்தல்’ மட்டுமே ஆகிவிட்ட, கடைசி மூச்சிற்கு ஏங்குகிற ஒரு கால கட்டத்தில், அதாவது முற்றும் துறந்துவிட்ட ஒரு மனநிலையில், அவன் ’ஏதோ வைத்திருந்தான்’ என்று இல்லாத ஒன்றைக் கூறும் போது, அவன் தவறு செய்தவன் போல் தடுமாறுகிறான், அவன் உடல் நடுங்குகிறது என்கிறார் காஃப்கா.  இந்த நுண்மொழியில் முதன் முறையாக, ஒரு உடல் சார்ந்த (புறம் சார்ந்த) பின் விளைவை எழுதியிருக்கிறார் காஃப்கா.  அவன் தனது இருத்தலுக்கு ஏதாவது பங்கம் வந்துவிடுமோ என்று பயந்ததால் ஏற்பட்ட தடுமாற்றமும், நடுக்கமும் என்று வேண்டுமானாலும் நாம் பொருள் கொள்ளலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29