காஃப்கா நுண்மொழி-24

காஃப்கா நுண்மொழி-24


    “உன் பாதங்களின் அளவைவிட, நீ நிற்கும் பூமியின் அளவு பெரிதாக இருந்துவிட முடியாது என்கிற உனது அதிர்ஷ்டத்தை பற்றிக்கொள்”

என் எண்ணம்:

    காஃப்கா இந்த பூமியில் நாம் நிற்பதே பெரும் அதிர்ஷ்டம் என்கிறார்.  நிற்பதற்கு மேல் எதையும் எதிர் பார்த்துவிடாதே என்பது தானே அவருடைய கருத்து!  இது ஒரு அடிப்படைவாதியின் கருத்தாக எனக்குப்படுகிறது.  தனது விடலைப் பருவத்தில் தன்னை நாத்திகவாதியகவும், சமத்துவ கொள்கை உள்ளவராகவும் அறிவித்திருக்கிறார்.

மூன்றடி மண் கேட்ட வாமனன் கதை, கற்பனையாக இருந்தால் கூட, விண்ணுக்கும் மண்ணுக்கும் அளந்து பிரமாண்டத்தை, பிரபஞ்சத்தை அளக்கச் சொல்கிறது.  அது கற்பனையின் எல்லையை விரிவாக்குகிறது.

இவர் 1925 வரைதான் உயிருடன் இருந்தார் என்பதால் 1969-ல் மனிதன் நிலவில் கால் வைத்துவிட்டது தெரியாமல் போய்விட்டது.

கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே பூமிக்கு வெளியே இடம் கேட்ட ஆர்க்கிமிடீஸ் வாழ்ந்திருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கக் கூடும்.

தனது தந்தையின் அதிகார கட்டுப்பாட்டிலேயே வளர்ந்த காலகட்டங்களில் இப்படியொரு எண்ணம் தோன்றியிருக்கலாமோ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29