Kafka Aphorisms - 10 & 11

காஃப்கா நுண்மொழி – 10 & 11


     “தான் நல்லவன் என்கிற அகந்தையால் A என்கிற ஒருவன் மண்டை வீங்கித் திரிகிறான்.  அது என்றும் மயக்கம் தருகிறதொரு பெரிய மாயை என்பதறியாமல், அறிந்திராத பல சின்னசிறு மாயைகளுக்கும் ஆட்படுகிறான்.

     உண்மை என்னவெனில், ஒரு பெரிய மாயப் பிசாசு அவனது மனதில் குடிகொண்டு விட்டதால், பல சிறிய பிசாசுகள், பெரியதற்கு சேவை செய்ய வரிசையாகப் பின்தொடர்கின்றன.”

     தான் நல்லவன் அல்லது நல்ல எண்ணங்கள் கொண்டவன் என்பது கூட ஒரு அகந்தையாக மாறிவிடுகிறது. அப்படியொரு மயக்கம் தருகிற எண்ணம், தன்னையறியாமல் அதை தொடரும் பல மயக்கங்களக்கு உள்ளாகிறது.   அந்த அகந்தையை மாயப் பிசாசு என்கிறார் காஃப்கா.

     ஒரு நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதன், தான் அப்படியிருக்கிறோம் என்கிற உள்மன அகந்தைகூட இல்லாமல் எப்படியிருப்பது?  ஆனால் அவன் மற்ற கேடுகள் தன்னை அண்டாமல் இருப்பதற்காக அந்த அகந்தையை வலுவேற்றுகிறான்.  அவனுக்குத் தெரிவதில்லை, ஒரு பிசாசு மற்ற பிசாசுகளை வரவேற்று மனதுள் குடியேற்றுகிறது என்று.  பிசாசு எப்போதும் பிசாசு தான்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29