காஃப்கா நுண்மொழி-27

காஃப்கா நுண்மொழி-27


    “நேர்மை நம்முள் விதைக்கப்பட்டிருக்கிறது.  தீமையைச் செய்யுமாறு நமக்கு போதிக்கப்படுகிறது”.

 என் எண்ணம்:

    ஒரு குழந்தை பிறக்கும்போது நல்லவனாகவே பிறப்பதாகவும், பிறகு அவனுள் திணிக்கப்படும் கற்பிதங்களினாலேயே அவன் நல்லவனாகவோ தீயவனாகவோ மாறுகிறான் என்பது காலங்காலமாக நாம் நம்பி வந்திருக்கிற கருத்துரு.  காஃப்காவின் கருத்தில், நேர்மை பின்னாட்களில் போதிக்கப்படுவதே இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

    இக்கருத்துக்கள் அறிவியல் வளர்ச்சிக்குப் பின் மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றன என்றே நினைக்கிறேன்.    ஒவ்வொருவடைய ஜீன்களிலும், டி.என்.ஏ.களிலும் பெற்றோருடைய குணாம்சங்கள் கடத்தப்படுகின்றன.  பிறகு சமூக சூழ்நிலையால் ஒவ்வொரு குணமும் தூண்டப்பட்டு அவை நடைமுறைக்கு வருகின்றன.

நமது வாழ்க்கை முறையில் நல்லது கெட்டது என்பது, கறுப்பு வெள்ளை போன்று தெளிவான வரையறைகள் கொண்டது அல்ல.  ஒருவனுக்கு நல்லதாகப்படுவது, இன்னொருவனுக்கு கெட்டதாகப் படுகிறது.

‘கருமி’ என்பது போன்ற குணாம்சங்கள் நல்லதா கெட்டதா என்று வரையறுக்க முடியாதவையாகவே உள்ளன.

தீய எண்ணங்கள் திணிக்கப்படுகின்றன என்று எடுத்துக் கொண்டால் நல்ல எண்ணங்களும் தான் திணிக்கப்படுகின்றன என்ற முடிவுக்கு வரலாம்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை சேர்த்து இங்கு சிந்திக்க வேண்டியிருக்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29