காஃப்கா நுண்மொழி-25

காஃப்கா நுண்மொழி-25


    “வாழ்வை நோக்கி முன்னேறுவதைத் தவிர வேறு எப்படி நாம் வாழ்வை கொண்டாடிவிட முடியும்?”

என் எண்ணம்:

    தேர்வுக்கு படிப்பதைத் தவிர வேறு எப்படி தேர்வின் முடிவை கொண்டாடிவிட முடியும்?  முயற்சியும் விளைவும், இரண்டும் நேர்திசையில் நகர்வன அல்லவா?  சரி, இது சிறிய எடுத்துக்காட்டு.

    ஆனால், வாழ்வில் இரண்டும் உண்டு, ஒன்று வாழ்வில் இருந்து விலகுதல், இராண்டாவது வாழ்வை நோக்கி நகர்தல்.  முற்றும் துறத்தல் இந்த வாழ்வினின்று நீங்கி முக்தியடைதல் என்கிற எல்லையற்ற ஆனந்தம் என்பது நமக்கு கற்பிக்கப்படுவது.

    யாதனின் யாதனின் நோங்கியான் நோதல்

    அதனின் அதனின் இலன்

இந்த வாழ்வில் இருந்து விலகிச் சென்ற ஒருவன் மீண்டும் வாழ்வை நோக்கி பயணிக்கும் போது மகிழ்ச்சியடைகிறான். காஃப்கா, இதுவரை பார்த்த நுண்மொழிகளில் தொடர்ந்து பயணிப்பதை பற்றியும், யாரும் அடைய முடியாத எல்லைக் கோட்டை அடைவது பற்றியும், திரும்புதல் பற்றியுமே மீண்டும் மீண்டும் பேசுகிறார்.

சுருங்கச் சொன்னால், ‘நகர்தல்’ என்பது வாழ்வில் மகிழ்ச்சியை தருவிக்கிற ஒன்றாக இருக்கிறது என்பதை காஃப்கா உணர்த்துகிறார்.

மையவிலக்கு விசையும், மைய நோக்கு விசையும் இந்த விண்வெளியில் இரண்டு முக்கிய இயங்கு சக்திகளாக இருக்கின்றன.  இந்த கோள்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதிவிடாதவாறும், ஒன்றிலிருந்து ஒன்று விலகிவிடாதவாறும் தொடர்ந்து இயங்க இந்த விசைகள் காரணமாகின்றன.

விலகினாலும் இன்பம், நெருங்கினாலும் இன்பம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29