காஃப்கா நுண்மொழி-19

காஃப்கா நுண்மொழி-19


     “தீமையின் இரகசியங்களை பாதுகாத்துவிட முடியும் என்று ‘தீமை’ வழங்கும் வாக்குறுதிகளை நம்பிவிடாதே”

எனது எண்ணம்:

     தன் நிலை காரணமாக, ஒரு சிறு தீமை செய்வதினால், நீ தீயவன் அல்ல என்று நினைப்பது ஒரு தவறான கண்ணோட்டம் என்பதை விளக்க முற்படுகிறார் காஃப்கா.  உன் அதிகாரத்தின் வலிமை காரணமாக, நீ செய்யும் ஒரு சின்ன தீமையை, நீ மறுக்கவோ  வேறு பெயரிட்டு அழைக்கவோ, திரித்து பேசவோ உன்னால் முடியும் என்றால் அது தீமை அல்ல என்றாகிவிடாது.  நீ அடிப்படையில் தீயவனாக இல்லாமல் அவ்வாறு செய்ய முடியாது.  ஆனால் அப்படியெல்லாம் தீமை உன்னை நம்ப வைக்கும்; நம்பிவிடக் கூடாது.  நன்மை என்பது கேட்டுப் பெற்று சொந்தம் கொண்டாடுவது அல்ல.  அது பொறுமையான அக்கறையினாலும் பகுத்தறிவதாலும் நிகழ்வது.

     இன்றைய நிலையில், காரிய சாத்தியத்திற்காக ஒரு லஞ்சம் கொடுக்கிற சுயநலமி கூட லஞ்சம் என்பதை அங்கீரித்துவிட்டதால், எதிர்வினை இல்லை என்கிற தைரியத்தாலும், வெளியே தெரியாது, மாட்டிக்கொள்ள மாட்டோம் என்கிற நிலையாலும், அவன் செய்கிற அப்படிப்பட்ட ஒரு செயல் அவனை நல்லவன் ஆக்கிவிடாது.

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29