Kafka Aphorism-9

காஃப்கா நுண்மொழி – 9


“ஒரு நாற்றமெடுத்த நாய், பல குட்டிகளின் தாய், சின்ன வயதில் எனக்கு எல்லாமாக இருந்தது.  பின்னர் என்னால் அதை அடிக்காமல் இருக்க முடியவில்லை.  அதன் சுருங்கிவரும் உருவமும், துர்நாற்றமும், என்னை விலகச் செய்தது.  நான் வேறு முடிவு எடுக்காவிடில், அது என்னையொரு மூலையில் தள்ளி, என் மேல் விழுந்து பிராண்டி, அதன் சீழ் பிடித்த நாக்கால் நக்கி என்னை அழுகிச் சிதைவுறச் செய்யும். இது எனக்கு பெருமை அல்ல”.

 

ஒரு சிறிய அரூப-உருவகக் கதைப் போல் இருக்கிறது. வழக்கம் போல் மேலை வழக்கத்தின் அருவருப்பான ரசனை.  ரத்தமும், சதையும், சீழும், புழுவும் என்று கற்பனை செய்வதும் எழுதுவதும் தான் தீவிர எழுத்து என்று இன்று பலரால் பார்க்கப்படுகிறது, எழுதப்படுகிறது. 

சிறு வயதில் நமக்கு ஏற்படும் ஏதோ ஒரு பழக்கத்திற்கு இந்த நாயினை உருவகமாக பயன்படுத்தியிருக்கிறார்.  பின்னாள், அதன் சிதைவும், அதனால் ஏற்படும் அருவருப்புகளும் பாதிப்பைத் தருகின்றன.  அதனிடமிருந்து விலகாவிடில் ஏற்படப்போகும் சீரழிவும், அவமரியாதையும் என்னவென்பதை வாசிப்பவரின் கற்பனைக்கு விடுகிறார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29