காஃப்கா நுண்மொழி-30

காஃப்கா நுண்மொழி-30

 “நற்குணம் என்பது ஒருவகையில் வசதியற்றது”


 என் எண்ணம்:

      என் தந்தை, ஜெயந்தன் கூறக் கேட்டிருக்கிறேன், “நல்ல குணம் என்பதொரு விலங்கு” என்று.  சில பல வாழ்க்கை நிகழ்வுகளில், நேரங்களில் அதை உணர்ந்திருக்கிறேன்.  நல்லவனாக வாழ முயற்சிக்கும் மனிதர்களுக்கு இது சட்டென்று ‘ஆம்’ என்று படும்.

     நல்லவன், சாலையோரம் சுவற்றில் சிறுநீர் கழிக்க முடியாது.

     நல்லவன், குடும்ப பிரச்சினைக்குக் கூட, வீட்டிற்குள் யாருடனும் சண்டை, சத்தம் போட முடியாது.

     ஒரு அவசரத்திற்கு யாரிடமும் கடன் கேட்டுக் கை நீட்ட முடியாது.  கொடுத்த கடனை திரும்ப கேட்க முடியாது.

     அதிகாரத்திற்கு எதிராக வாய் திறக்க முடியாது.

     ஆசையில் காதலிக்கு முத்தம் கொடுக்க அவசரப்பட முடியாது.

     ஓடிப் போய் அவசரத்திற்கு நகரும் பேருந்தில் ஏற முடியாது.

     ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும், கேள்வி கேட்க முடியாது.
     நன்மை, புரிந்துகொள்வதற்கு சிரமமும் குழப்பமும் தரக்கூடியது.  எது நன்மை என்கிற நிரந்தரத் தேடல் தொடர்கிறது.  தீமையோ நம்மை நோக்கி எளிதாக வந்தடைந்துவிடுகிறது.  ஓரிடத்தில் தீமை அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது என்றால், நன்மை போராடாமல் விலகிக்கொள்கிறது.    தீமை வெளியேற்றப் பட்டிருந்தாலும் கூட, நன்மை அதை நம்பத் தயாராக இருப்பதில்லை.  நன்மையைத் தேடி அடைவதைக் காட்டிலும், நற்குணம் நன்மையைத் தேடிக் கொண்டிருகிறது என்கிற செய்தி ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29