Kalfka Aphorisms-3

காஃப்கா நுண்மொழிகள்-3



மனித வாழ்வின் தீங்குகள் அனைத்திற்கும் அடிப்படை மூலகாரணிகளாக விளங்கும் இரண்டு தீயொழுக்கங்கள்:  பொறுமையின்மையும், பொறுப்பின்மையும்.  பொறுமையின்மை மனிதர்களை சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றியது.  பொறுப்பின்மை அவர்களை மீண்டும் வீடு சேராதவாறு தடுக்கிறது.  ஆனால், ஒருவேளை ஒரேயொரு அடிப்படைத் தீயொழுக்கமாக பொறுமையின்மையே இருக்கக்கூடும்.  ஏனெனில், பொறுமையின்மையே அவர்களை வெளியேற்றியது.  அதே பொறுமையின்மையே அவர்களை மீண்டும் வீடு சேராமல் விலக்கிவைக்கிறது.”


நுண்மொழி-2 –ல் பொறுமையின்மையே மனிதனின் அடிப்படை தவறுகளுக்கு காரணியென்றார்.


3-ல் மனிதர்களை சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றிய இரண்டு தீயொழுக்கங்கள், பொறுமையின்மையும், பொறுப்பின்மையும் என்கிறார்.  அடுத்த வரியிலேயே தானே முரண்பட்டு, ஒரே ஒரு தீயொழுக்கம்பொறுமையின்மை’ என்கிறார்.  (‘சுவர்க்கத்திலிருந்து மனிதர்களை வெளியேற்றியதுஎன்பதை Paradise Lost என்பதாக புரிந்து கொள்கிறேன்).  அவருடைய, அவர் நம்பிய கோட்பாடுகள் அதிகமாக விவிலிய கதைகளை அடிப்படையாகக் கொண்டவை என்று தெரிகிறது.


ஆன்மீக வழி அணுகுமுறையில், தீங்குகளுக்கு அடிப்படை காரணம் பொறுமையின்மை என்று சொல்லப்படுகிறது.  ஆன்மீகம் போதிப்பவர்கள் அனைவரும், ‘தீங்குஎன்றால், அது மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ளும்தீங்குதான் என்றும் அதற்கு தன் வினைகளே காரணம் என்றும் விவரிக்கிறார்கள்.  ஆதாம் ஏவாளுக்கு பின்னான வாழ்வில்  தீங்குஎன்பது பிற மனிதனாலும், நியாயமான காரணமின்றி, இன்னொரு மனிதனுக்கு விளைவிக்க முடிகிற ஒரு தீங்கான செயல் என்பதை மறந்துவிடுகிறார்கள்.  வினை விதித்தவன் வினை அறுப்பான்என்கிற சப்பைகட்டு விளக்கம் கொடுக்கப்படுகிறது
.  ஆசையே துன்பத்திற்கு காரணம் என்கிற கோட்பாடு அடிபடுகிறது.  இன்றைய வாழ்வில் பொறுமை என்ன பலனைத் தருகிறது ?   மேலேறி மிதித்துச் செல்லும் மாடுகள் போய்க் கொண்டுதான் இருக்கின்றன.

தொடரும் ...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29