காஃப்கா நுண்மொழி-14

காஃப்கா நுண்மொழி-14


“ஒரு சமவெளியில், ஒரு நேர்மையான நோக்கத்துடன் நடந்து கொண்டிருக்கும்போது உனக்கு பின்னடைவு நேருமானால் அதற்காக விரக்தியடையலாம்.  ஆனால், சிகரம் தொடுவதற்காக நீ செங்குத்து மலையில் மேல் நோக்கி ஊர்ந்து ஏறும் போது பின்னடைவு ஏற்பட்டால் அதற்காக நீ வருந்துவது தவறு.  ஏனென்றால், அத்தகைய பின்னடைவிற்கான காரணம், நிலத்தின் இயற்கையான தன்மைதான்.”

 

நமது முயற்சிகளில் பின்னடைவு வருத்தங்களைத் தருவதுதான்.  ஆனால், நமது பின்னடைவிற்கான காரணம், நாமன்றி வேறு புறக்காரணமாக இருப்பின், புவியீர்ப்பு விசை போன்ற பெரும் சக்தியாக இருக்கும்பட்சத்தில் அதற்காக நாம் விரக்தியடைய வேண்டியதில்லை.  மலையேறும் போது வழுக்கினால் மலையிடம் தவறு காண்பது தவறு.  கீழே விழுவதற்கான காரணம் நிலம் தானே!

ஆனால், மனித மனம் தோல்வியால் வருந்தாமல் இருக்குமா என்ன?  துரோகங்களால் வீழ்த்தப்படும் போது வலிக்கத்தானே செய்யும்!  இந்த மாதிரி மொழிகளை வாசித்து கொஞ்சம் காயத்தை ஆற்றிக் கொள்ளலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29