காஃப்கா நுண்மொழி-4

 

மயான நதிக்கரையில் நின்று

நீர் நக்கி உழல்கின்றன

மாண்டவரின் ஆவிகள்

இங்கிருந்து பாயும் அந்நதியில்

இம்மை சுவைக்கிறது

கடலின் கரிக்கிறது

நரவாடை மூச்சடைத்து

சினங்கொண்டு வீசியெறிகிறது

அந்நதி மரித்தோரை

கரை வீழ்ந்தோர் ஆனந்தக் கூத்தில்

நன்றி சொல்லும்

கோஷ்டிகானம் கேட்கிறது

 

நேரடியக ஆங்கில மொழியாக்கத்திலிருந்து பொருளினை கவிதையாக எடுத்துக் கொண்டேன்.  பிறவி பெருங்கடல் நீந்துவர்என்கிற குறள் நினைவிற்கு வந்து போகிறது.  ஆகெரான்என்கிற கிரேக்க புராண நதி இந்த நுண்மொழியில் குறிப்பிடப்படுகிறது.  இம்மையின் சுவையை மரித்தவரின் ஆன்மா விடாது தொடர்ந்து நக்குவதை கண்டு கோபம் கொண்ட அந்தநதி அவர்களை தூக்கி கரையில் வீசிச் செல்வதாகவும், அவர்கள் நன்றி எனும் கோஷ்டிகானம் பாடுவதாகவும் எழுதப்பட்டுள்ளது.  முக்தி அல்லது மறுமையின் பேரு குறித்து அறியாத ஆன்மாக்கள் மீது அந்த நதி கோபம் கொள்வதாக பொருள் கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29