காஃப்கா நுண்மொழி-15

காஃப்கா நுண்மொழி-15


“இலையுதிர் காலத்தின் ஒரு பாதையைப் போல் தொடர்ந்து உதிரும் சருகுகளால் மூடிவிடப்படும் அப்பாதை முழுவதுமாய் சுத்தம் செய்யப்படுவடுது இயலாததாகி விடுகிறது”

சருகுகள் நிறைந்த ஒரு பாதையை ஒருவன் சுத்தம் செய்து முன்னேறும் முன் மீண்டும் சருகுகளால் மூடப்படுகிறது.   கடந்து வந்த பாதையை திரும்பப் பார்த்தால் மீண்டும் மூடியிருக்கிறது.  முன்னால் சுத்தம் செய்யப்பட்ட அந்த இரண்டடி பாதை மட்டும் தெரிகிறது.  இன்றைய உதாரணமாகச் சொன்னால், ஒரு டார்ச் லைட் வழிகாட்டுகிற இரண்டடி பாதைதான் முன்னால் தெரிகிறது.  கடந்தபின் பின்னால் இருள் சூழ்ந்துவிடுகிறது.  இதை ஒரு குறியீட்டுக் கதையாக எடுத்துக் கொண்டால்,  வாழ்க்கைப் பாதையை எப்படிக் கடக்க வேண்டும் என்று காஃப்கா சொல்கிறார் என்ற புரிகிறது.  நீண்ட பாதை தெளிவிற்குப் பிறகு பயணத்தை தொடங்குவது என்பது முடியாது.  இரண்டு இரண்டு அடிகளாக பயணிக்க வேண்டியதுதான் வாழ்க்கை.

முந்தைய நுண்மொழியில், மலையேறி சறுக்குவதைப் பற்றி சொல்லியிருக்கிறார்.  பின்னடைவு, சருகுகளால் மூடப்படும் பாதையில் கூட ஏற்படலாம் என்றும் சொல்கிறார்.

இலையுதிர் காலத்தின் மீண்டும் மீண்டும் நிரம்பும் பாதை போல் படிம /குறியீட்டுக் கதைகளை சொல்வதில் திறமையை காட்டுகிறார் காஃப்கா.  இப்படியான சிந்தனைகள் மற்றும் வடிவங்கள் இன்று கவிதைகள் எனவும், ஹைக்கூ எனவும் உள்ளீடற்று உடனுக்குடன் முகநூலில் அரங்கேறிவிடுகின்றன.

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29