காஃப்கா நுண்மொழி-17

காஃப்கா நுண்மொழி-17


இந்த இடத்திற்கு நான் இதுவரை வந்ததில்லை.  என் சுவாசமே வேறு மாதிரியாக இருக்கிறது.  சூரிய ஒளியினை விஞ்சி நிற்கிறது அதன் பின்னே தெரியும் மற்றொரு நட்சத்திரத்தின் ஒளி.”

என் எண்ணம்:

காஃப்கா இதுவரை வாழாததொரு வாழ்வை விரும்புகிறார்.  இந்த உலகத்தில் ஒரே ஒரு சூரியன்தான் இருக்கிறது.  அவர் விரும்பும் உலகத்தில் சூரியனை மிஞ்சக் கூடிய இன்னொரு நட்சத்திரம் இருக்கிறது.  இவ்வாழ்விலேயே, இன்னொரு புதிய வாழ்வை நாம் வாழவேண்டும் என்கிறார்.  அவர் சொல்லும் புதிய வாழ்வு என்பது சொர்க்கம் அல்ல. 

நுண்மொழி-5 ல் திரும்புதல் இல்லாத எல்லைக் கோடு ஒன்றிருக்கிறது, அந்த எல்லையை அடைவதே லட்சியம் என்கிறார்.   அப்படி திரும்புதல் இல்லா ஒரு எல்லைக் கோட்டிற்கு அப்பால், ஒரு புதிய வாழ்வை, புதிய சுவாசத்தை, புதிய ஒளியை அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறார். 

அப்படி ஒரு புதிய வாழ்வு என்பது, இந்த பிறப்பிற்குள்ளாகவே இன்னொரு பிறப்பெய்தி வேறொரு வாழ்க்கையை வாழும் ஒரு உத்தியாக இருக்கக் கூடும்.

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29