Kafka Aphorisms -2

காஃப்கா நுண்மொழி-2



“மனிதன் இழைக்கும் தவறுகள் அனைத்தும் பொறுமையின்மையிலிருந்தே கிளைவிடுகின்றன.  முறையான அணுகுநெறியிலிருந்து உரிய காலத்துக்கு முன்பே முறிந்துவிடுகிறது.  உண்மையெனத் தோன்றுவதை உண்மையெனத் தோன்றுமாறு விவரிப்பதே அந்த அணுகுநெறி.”

நான், என் புரிந்துகொள்ளும் வசதிக்காக இப்படி தகவமைத்துக் கொள்கிறேன் :

“உண்மைபோல் தோன்றுவதை உண்மையேயென நிறுவுவதில், பொறுமையின்மையிலிருந்து கிளைவிடும் பிழைகள், அத்தகைய செயல்முறையை முதிராமல் தோல்வியடையச் செய்கின்றன.”

நமக்கு தெரியாத, ஆதிகாலத்தில் தோன்றிவிட்ட, இந்த உலகை, இந்த அண்டசராசரத்தை, இந்த உயிர்களை, இந்த வாழ்க்கையை, இந்த  தத்துவங்களை, உண்மைபோல் தோன்றும் இவற்றை உண்மையென்று நிறுவுவதில் நாம் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறோம்.  இவற்றை உண்மையென்று நிறுவுவதற்கான நமது செயல்முறைகள், பொறுமையின்மை காரணமாக, தவறான செயல்முறைகளாக  முதிர்ச்சியடையாமல் மடிகின்றன.  ‘பாதை’ என்கிற உருவகம் தொடர்ந்து அவரது நுண்மொழிகளின் வருவதுபோலவே, method என்கிற செய்முறை அல்லது ‘அணுகுமுறை’  என்கிற கோட்பாடும் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது.   செயல்முறை என்பது எவற்றை ‘பிழை’ என்று சுட்டுகிறதோ, அந்தப் பிழைகள் ‘செயல்முறையை’ கொன்றுவிடுகின்றன.

உண்மை எது என்ற அடுத்த கட்ட தேடலுக்கான முன்னெடுப்பாகவே இந்த நுண்மொழி எனக்குப் புரிகிறது.

தொடரும்…


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29