காஃப்கா நுண்மொழி-7 & 8

காஃப்கா நுண்மொழி-7 & 8


“தீயவற்றின் வலிமையான கவர்ச்சிகளில் ஒன்று, போராட்டத்திற்கான அழைப்பு”

படித்தவுடனேயே இது நமக்கு உடன்படாததொரு கருத்தாகவே படுகிறது.  போராட்டம் என்கிற சொல்மீதும், செயல்மீதும் நமக்கு ஏற்பட்டிருக்கிற புரிதலும், மதிப்பும், காஃப்காவிற்கு இல்லை என்றே தோன்றுகிறது.  தீமைகளுக்கு எதிராகத்தானே போராட்டங்கள் இருக்க முடியும், இருக்க வேண்டும்?   பிறகெப்படி தீமையின் கவர்ச்சியாக அது கூறப்படுகிறது?

சில மொழி பெயர்ப்புகளில் நுண்மொழி-7 உடன்  நு.மொ-8 ம் இணைக்கப்பட்டுள்ளது,  அது,

அது பெண்களுடன் நடக்கும் போராட்டத்தைப் போன்றது, இறுதியில் படுக்கையில் முடிவுறும்

இந்த நுண்மொழியின் நேரடி பொருள் ஒரு தன்னம்பிக்கையற்ற மனிதனின் கருத்தாகவே நான் பார்க்கிறேன்.  மேலும் படுக்கையை இழிவு செய்வதாவும், பெண்களை சாகசம் செய்பவர்களாகவும் இது சித்தரிக்கிறது என்பதால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை.

இன்னொருவகையில், தீமை தன்னுடனான போராட்டத்திற்கு அழைப்பதையே ‘கவர்ச்சியான வலிமை’ என்கிறார்கள்.  தீமையுடனான போராட்டம் எப்படி கவர்ச்சியானதாக இருக்கும்?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29