Kafka Aphorism-5

காஃப்கா நுண்மொழி-5



ஒரு எல்லைக்கோட்டிலிருந்து திரும்புதல் என்பது கிடையாது.  அதுவே அடையப்பட வேண்டிய எல்லை.”

தனியாக பொருள் தரும் இந்த நுண்மொழியுடன், ‘திரும்புதல்’ குறித்த, இதற்கு முந்தைய இரண்டு மொழிகளையும் சேர்த்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.

மூன்றாவது நு.மொ. Paradise Lost – பொறுமையின்மை காரணமாக சொர்க்கத்தை இழந்தவர்களுக்கு வீடுதிரும்புதல்கிடையாது.  நான்காவது நு.மொ.  மரண ஆற்றின் கரையில் அமர்ந்துவிட்டவர்கள் திரும்புகிறார்கள்.  அந்த ஆற்றை கடந்துவிட்டவர்களுக்குதிரும்புதல்’ என்பது கிடையாது.

எனவே இந்த நுண்மொழி அடையவேண்டிய லட்சியம் குறித்ததா அல்லது திரும்புதல் இல்லாத, கடந்துவிட வேண்டிய எல்லை குறித்ததா என்பது தொடர் சிந்தனைக்குரியது.

காஃப்காவின் ஆன்மீக பின்னணியில் இது மரணத்திற்கு பிந்தைய நிலை குறித்தும், சொர்க்கத்திற்கு செல்லும் பாதை குறித்தும் பேசுகிறது என்றே நினைக்கலாம்.

நமது வாழ்வில் நமது லட்சியம் குறித்து, திரும்புதல் என்கிற சிந்தனை இல்லாத, எல்லையற்ற பயணம் குறித்து பேசுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

ஜென் கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.  “அந்த மலையின் உச்சியை தொட வேண்டுமென்றால் எங்கிருந்து தொடங்குவது” என்ற மாணவனின் கேள்விக்கு “அந்த மலையின் உச்சியிலிருந்து தொடங்கு” என்று அந்த ஜென் குரு பதிலளித்ததாக ஒரு கதை உண்டு.

திரும்புதல் என்ற சிந்தனை அற்றுப் போகும் ஒரு புள்ளியிலிருந்து பயணத்தை தொடங்கு என்று புரிந்து கொள்கிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

காஃப்காவின் நுண்மொழி-29