இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காஃப்கா நுண்மொழி-19

படம்
காஃப்கா நுண்மொழி-19      “தீமையின் இரகசியங்களை பாதுகாத்துவிட முடியும் என்று ‘தீமை’ வழங்கும் வாக்குறுதிகளை நம்பிவிடாதே” எனது எண்ணம்:      தன் நிலை காரணமாக, ஒரு சிறு தீமை செய்வதினால், நீ தீயவன் அல்ல என்று நினைப்பது ஒரு தவறான கண்ணோட்டம் என்பதை விளக்க முற்படுகிறார் காஃப்கா.   உன் அதிகாரத்தின் வலிமை காரணமாக, நீ செய்யும் ஒரு சின்ன தீமையை, நீ மறுக்கவோ   வேறு பெயரிட்டு அழைக்கவோ, திரித்து பேசவோ உன்னால் முடியும் என்றால் அது தீமை அல்ல என்றாகிவிடாது.   நீ அடிப்படையில் தீயவனாக இல்லாமல் அவ்வாறு செய்ய முடியாது.   ஆனால் அப்படியெல்லாம் தீமை உன்னை நம்ப வைக்கும்; நம்பிவிடக் கூடாது.   நன்மை என்பது கேட்டுப் பெற்று சொந்தம் கொண்டாடுவது அல்ல.   அது பொறுமையான அக்கறையினாலும் பகுத்தறிவதாலும் நிகழ்வது.      இன்றைய நிலையில், காரிய சாத்தியத்திற்காக ஒரு லஞ்சம் கொடுக்கிற சுயநலமி கூட லஞ்சம் என்பதை அங்கீரித்துவிட்டதால், எதிர்வினை இல்லை என்கிற தைரியத்தாலும், வெளியே தெரியாது, மாட்டிக்கொள்ள மாட்டோம் என்கிற நிலையாலும், அவன் செய்கிற அப்படிப்பட்ட ஒரு செயல் அவனை நல்லவன் ஆக்கிவிடாது. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்
படம்
காஃப்கா நுண்மொழி-18 “அந்த கோபுரத்தின் மேல் மனிதர்கள் ஏறாமல் கட்ட முடிந்திருந்தால், பேபல் கோபுரம் அனுமதிக்கப்பட்டிருக்கும்”   என் எண்ணம்: ‘பேபல் கோபுரம்’ என்பது விவிலிய கதைகளில் வருகிற ஒரு உருவகம்.   பெரு வெள்ளத்திற்கு பிறகு பிழைத்த மனிதர்கள் ஷினார் என்கிற இடத்தில் மிக உயரமான ஒரு கோபுரத்தை கட்டி அதில் தஞ்சம் புகுந்துவிட்டால் இன்னொரு முறை வெள்ளத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கட்டுகிறார்கள்.   அந்த கோபுரத்தின் உயரம் கடவுளின் உலகத்தை தொட்டுவிடுவதற்கான முயற்சியாகவும் இருக்கிறது.   பேபல் என்பதற்கு கூச்சல் அல்லது இரைச்சல் என்கிற பொருளும் காணப்படுகிறது.   அவர்களின் முயற்சியை முறியடிக்க, கடவுள் அவர்களுக்குள் பல மொழிகளை உருவாக்குகிறார்.   ஒருவருக்கொருவர் பேச முடியாமல் போவதால், அக்கோபுர கட்டுமானம் நின்று போகிறது. மனிதனது செயலுக்கு இது கடவுள் அளித்த தட்டணை என்று பார்க்கப்படுகிற இக்கதை, பின்னாளில் இது பல நாகரீகங்கள் உருவாக காரணமாக இருந்ததாகவும் பேசப்பட்டது. மேலே ஏறாமல் கட்டப்பட்டிருந்தால், அக்கோபுரம் அனுமதிக்கப்பட்டிருக்கும் என்கிறார் காஃப்கா.   அது எப்படி? நுண்மொழி 15-ல் சரு

காஃப்கா நுண்மொழி-17

படம்
காஃப்கா நுண்மொழி-17 “ இந்த இடத்திற்கு நான் இதுவரை வந்ததில்லை.   என் சுவாசமே வேறு மாதிரியாக இருக்கிறது.   சூரிய ஒளியினை விஞ்சி நிற்கிறது அதன் பின்னே தெரியும் மற்றொரு நட்சத்திரத்தின் ஒளி.” என் எண்ணம்: காஃப்கா இதுவரை வாழாததொரு வாழ்வை விரும்புகிறார்.   இந்த உலகத்தில் ஒரே ஒரு சூரியன்தான் இருக்கிறது.   அவர் விரும்பும் உலகத்தில் சூரியனை மிஞ்சக் கூடிய இன்னொரு நட்சத்திரம் இருக்கிறது.   இவ்வாழ்விலேயே, இன்னொரு புதிய வாழ்வை நாம் வாழவேண்டும் என்கிறார்.   அவர் சொல்லும் புதிய வாழ்வு என்பது சொர்க்கம் அல்ல.  நுண்மொழி-5 ல் திரும்புதல் இல்லாத எல்லைக் கோடு ஒன்றிருக்கிறது, அந்த எல்லையை அடைவதே லட்சியம் என்கிறார்.    அப்படி திரும்புதல் இல்லா ஒரு எல்லைக் கோட்டிற்கு அப்பால், ஒரு புதிய வாழ்வை, புதிய சுவாசத்தை, புதிய ஒளியை அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறார்.   அப்படி ஒரு புதிய வாழ்வு என்பது, இந்த பிறப்பிற்குள்ளாகவே இன்னொரு பிறப்பெய்தி வேறொரு வாழ்க்கையை வாழும் ஒரு உத்தியாக இருக்கக் கூடும்.  

காஃப்கா நுண்மொழி-16:

படம்
காஃப்கா நுண்மொழி-16:        “கூண்டு ஒன்று பறவை ஒன்றைத் தேடிச் சென்றது” எனது பார்வை: உள்ளே பறவை அடைக்கப்பட்டிருந்தால் தானே அது கூண்டு?   இது ஒரு முரண் தொகை.   உள்ளே பறவை அடைக்கப்படாததால் அது தனது கூண்டு என்கிற தன்மையை இழக்கிறது. எனது பள்ளி இயற்பியல் ஆசிரியர் ஒரு உதாரணம் சொல்லுவார்.   சைக்கிளில் பிரேக் இருக்கிறது.   அது எந்த இயக்கத்தை நிறுத்துகிறது?   அந்த பிரேக்கை கழட்டி தனியாக வைத்துவிட்டால், அது பிரேக் ஆகிவிடுமா?   அதை பிரேக் என்று நாம் சொன்னாலும், அதனால் எந்த ஒரு இயக்கத்தையும் தடை செய்ய முடியாது.   அது சைக்கிளில் இருக்கும் போது கூட, இந்த பூமியின் சுழற்சியை நிறுத்திவிடுகிறதா என்ன? அது போல, ஒரு கூண்டு தன்னுள் அடைபட்ட பறவை ஒன்று இல்லையென்றால் அது தன் தன்மையை இழக்கிறது.   அது தன்னை நிலை நிறுத்திக்கொள்ள, ‘தான்’ யாரென்று நிறுவிக்கொள்ள பறவை ஒன்றை தேடிச் செல்கிறது. பறவை கூட சுதந்திரமாய் பறந்து திரியும் வரைதான் அது பறவை.   சிறைப் பட்டுவிட்டால், அது உண்மையான அர்த்தத்தில் பறவையா? ஒரு பறவையை அதன் சுதந்திர பறத்தல் காரணமாக விரும்புகிறீர்கள்.   அதை தனதாக்கிக் கொள்ள முயல்கிறீர்கள்.   அ

காஃப்கா நுண்மொழி-15

படம்
காஃப்கா நுண்மொழி-15 “இலையுதிர் காலத்தின் ஒரு பாதையைப் போல் தொடர்ந்து உதிரும் சருகுகளால் மூடிவிடப்படும் அப்பாதை முழுவதுமாய் சுத்தம் செய்யப்படுவடுது இயலாததாகி விடுகிறது” சருகுகள் நிறைந்த ஒரு பாதையை ஒருவன் சுத்தம் செய்து முன்னேறும் முன் மீண்டும் சருகுகளால் மூடப்படுகிறது.    கடந்து வந்த பாதையை திரும்பப் பார்த்தால் மீண்டும் மூடியிருக்கிறது.   முன்னால் சுத்தம் செய்யப்பட்ட அந்த இரண்டடி பாதை மட்டும் தெரிகிறது.   இன்றைய உதாரணமாகச் சொன்னால், ஒரு டார்ச் லைட் வழிகாட்டுகிற இரண்டடி பாதைதான் முன்னால் தெரிகிறது.   கடந்தபின் பின்னால் இருள் சூழ்ந்துவிடுகிறது.   இதை ஒரு குறியீட்டுக் கதையாக எடுத்துக் கொண்டால்,   வாழ்க்கைப் பாதையை எப்படிக் கடக்க வேண்டும் என்று காஃப்கா சொல்கிறார் என்ற புரிகிறது.   நீண்ட பாதை தெளிவிற்குப் பிறகு பயணத்தை தொடங்குவது என்பது முடியாது.   இரண்டு இரண்டு அடிகளாக பயணிக்க வேண்டியதுதான் வாழ்க்கை. முந்தைய நுண்மொழியில், மலையேறி சறுக்குவதைப் பற்றி சொல்லியிருக்கிறார்.   பின்னடைவு, சருகுகளால் மூடப்படும் பாதையில் கூட ஏற்படலாம் என்றும் சொல்கிறார். இலையுதிர் காலத்தின் மீண்டும் மீண்டும்

காஃப்கா நுண்மொழி-14

படம்
காஃப்கா நுண்மொழி-14 “ஒரு சமவெளியில், ஒரு நேர்மையான நோக்கத்துடன் நடந்து கொண்டிருக்கும்போது உனக்கு பின்னடைவு நேருமானால் அதற்காக விரக்தியடையலாம்.   ஆனால், சிகரம் தொடுவதற்காக நீ செங்குத்து மலையில் மேல் நோக்கி ஊர்ந்து ஏறும் போது பின்னடைவு ஏற்பட்டால் அதற்காக நீ வருந்துவது தவறு.   ஏனென்றால், அத்தகைய பின்னடைவிற்கான காரணம், நிலத்தின் இயற்கையான தன்மைதான்.”   நமது முயற்சிகளில் பின்னடைவு வருத்தங்களைத் தருவதுதான்.   ஆனால், நமது பின்னடைவிற்கான காரணம், நாமன்றி வேறு புறக்காரணமாக இருப்பின், புவியீர்ப்பு விசை போன்ற பெரும் சக்தியாக இருக்கும்பட்சத்தில் அதற்காக நாம் விரக்தியடைய வேண்டியதில்லை.   மலையேறும் போது வழுக்கினால் மலையிடம் தவறு காண்பது தவறு.   கீழே விழுவதற்கான காரணம் நிலம் தானே! ஆனால், மனித மனம் தோல்வியால் வருந்தாமல் இருக்குமா என்ன?   துரோகங்களால் வீழ்த்தப்படும் போது வலிக்கத்தானே செய்யும்!   இந்த மாதிரி மொழிகளை வாசித்து கொஞ்சம் காயத்தை ஆற்றிக் கொள்ளலாம்.

காஃப்கா நுண்மொழி-13

படம்
காஃப்கா நுண்மொழி-13 “புரிதலின் முதல் மெல்லிய ஒளிக்கீற்று மரணத்திற்கான அவாவாக இருக்கிறது.   இவ்வாழ்க்கையே தாங்க வொண்ணாததாகவும் மறுவாழ்க்கை அடைய முடியாததாகவும் இருக்கிறது.   மரணத்திற்கான காத்திருத்தல் வெட்கப்பட வேண்டியதில்லை என்று உணர்கிறான்.   வெறுப்படைந்துவிட்ட பழைய கூண்டிலிருந்து, காலத்தால் மீண்டும் வெறுக்கத்தக்கதாய் மாறிவிடக் கூடிய புதிய கூண்டிற்குச் செல்வதற்கு விண்ணப்பிக்கிறான்.   இந்தக் கைதியை அழைத்துச் செல்லும் பாதையில் எதிரே வரும் எஜமானன், ‘இந்தக் கைதியை மீண்டும் சிறையில் அடைக்காதீர்கள், இவன் என்னுடன் வரத்தக்கவன்’ என்று கூறுவதற்கான கடைசிக்கீற்று நம்பிக்கையும் இருக்கத்தான் செய்கிறது.” மிக எளிதாய் புரிந்து கொள்ளக்கூடிய நுண்மொழி இது.   இம்மை, மறுமை, மரணம், கடவுள், சொர்க்கம் என்கிற மீண்டும் மீண்டும் நாம் கேள்விப்பட்டிருக்கிற விஷயங்கள்தான்.   அடைய முடியாத புதிய வீடுகூட நாளடைவில் வெறுக்கத் தக்கதாகவே இருக்கும் என்கிறார் காஃப்கா.   புதிய வீட்டிற்குச் செல்ல விண்ணப்பிக்கிற ஒருவன், ஏன் ‘விடுதலை’ குறித்தோ ‘முக்தி’ குறித்தோ விண்ணப்பிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.   ஏனென்றால், இங்கே ‘முக்

காஃப்கா நுண்மொழிகள் – 11 & 12

படம்
காஃப்கா நுண்மொழிகள் – 11 & 12 “ ஒரு பொருளின் மீதான பார்வைகளுக்கு பலவிதமான வேறுபாடுகள் உண்டு.   உதாரணமாக, மேஜை மீதிருக்கிற ஆப்பிளை எட்டிப் பார்க்க ஒரு சிறுவன் தன் கழுத்தை கொக்கு போல நீட்ட வேண்டியிருக்கிறது.   ஆனால் அந்த வீட்டு எஜமானன் எளிதாக அதையெடுத்து தன் விருந்தாளிக்கு அளிக்கிறான்”.   இந்த நுண்மொழியை ஒரு ஓவியனுக்குரிய படிம கற்பனையோடு சொல்லியிருக்கிறார் காஃப்கா என்று மகிழ்கிறேன்.   ஒரே பொருள் வெவ்வேறு கோணங்களில், வெவ்வேறு எண்ணங்ளும், கருத்துக்களும் கொண்டவை என்று சொல்கிறார்.   ஒரு மேஜையின் மேலிருக்கிற ஆப்பிளை பார்க்கவே சிரமப்படுகிற ஒரு சிறுவனுக்கு அதை தின்ன வேண்டும் என்கிற ஆசையிருக்கிறது.   அதே வேளையில், அதை சுலபமாக கையில் எடுக்கக் கூடிய ஒருவர் அதை தின்னாமல் தனது விருந்தாளிக்கு அளித்து மகிழ்க்கிறார்.   அவரது எண்ண ஓட்டத்தில் சிறுவனின் ஏக்கம் இல்லை.   தானும் தின்னாமல் இன்னொருவருக்கு ஏன் கொடுக்கிறார் என்று சிறுவனும் வியக்கக்கூடும்.   அந்த ஆப்பிள் மேல் ஆர்வமும் ஆசையும் கொண்ட அந்த சிறுவன் ஏன் அதை எடுத்து தின்னவில்லை, அல்லது ஏன் தயங்குகிறான் என்று நீங்கள் சிந்திக்கலாம்.   அல்லது அந

Kafka Aphorisms - 10 & 11

படம்
காஃப்கா நுண்மொழி – 10 & 11      “தான் நல்லவன் என்கிற அகந்தையால் A என்கிற ஒருவன் மண்டை வீங்கித் திரிகிறான்.   அது என்றும் மயக்கம் தருகிறதொரு பெரிய மாயை என்பதறியாமல், அறிந்திராத பல சின்னசிறு மாயைகளுக்கும் ஆட்படுகிறான்.      உண்மை என்னவெனில், ஒரு பெரிய மாயப் பிசாசு அவனது மனதில் குடிகொண்டு விட்டதால், பல சிறிய பிசாசுகள், பெரியதற்கு சேவை செய்ய வரிசையாகப் பின்தொடர்கின்றன.”      தான் நல்லவன் அல்லது நல்ல எண்ணங்கள் கொண்டவன் என்பது கூட ஒரு அகந்தையாக மாறிவிடுகிறது. அப்படியொரு மயக்கம் தருகிற எண்ணம், தன்னையறியாமல் அதை தொடரும் பல மயக்கங்களக்கு உள்ளாகிறது.    அந்த அகந்தையை மாயப் பிசாசு என்கிறார் காஃப்கா.      ஒரு நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதன், தான் அப்படியிருக்கிறோம் என்கிற உள்மன அகந்தைகூட இல்லாமல் எப்படியிருப்பது?   ஆனால் அவன் மற்ற கேடுகள் தன்னை அண்டாமல் இருப்பதற்காக அந்த அகந்தையை வலுவேற்றுகிறான்.   அவனுக்குத் தெரிவதில்லை, ஒரு பிசாசு மற்ற பிசாசுகளை வரவேற்று மனதுள் குடியேற்றுகிறது என்று.   பிசாசு எப்போதும் பிசாசு தான்.

Kafka Aphorism-9

படம்
காஃப்கா நுண்மொழி – 9 “ஒரு நாற்றமெடுத்த நாய், பல குட்டிகளின் தாய், சின்ன வயதில் எனக்கு எல்லாமாக இருந்தது.   பின்னர் என்னால் அதை அடிக்காமல் இருக்க முடியவில்லை.   அதன் சுருங்கிவரும் உருவமும், துர்நாற்றமும், என்னை விலகச் செய்தது.   நான் வேறு முடிவு எடுக்காவிடில், அது என்னையொரு மூலையில் தள்ளி, என் மேல் விழுந்து பிராண்டி, அதன் சீழ் பிடித்த நாக்கால் நக்கி என்னை அழுகிச் சிதைவுறச் செய்யும். இது எனக்கு பெருமை அல்ல”.   ஒரு சிறிய அரூப -உருவகக் கதைப் போல் இருக்கிறது . வழக்கம் போல் மேலை வழக்கத்தின் அருவருப்பான ரசனை .   ரத்தமும் , சதையும் , சீழும் , புழுவும் என்று கற்பனை செய்வதும் எழுதுவதும் தான் தீவிர எழுத்து என்று இன்று பலரால் பார்க்கப்படுகிறது , எழுதப்படுகிறது .   சிறு வயதில் நமக்கு ஏற்படும் ஏதோ ஒரு பழக்கத்திற்கு இந்த நாயினை உருவகமாக பயன்படுத்தியிருக்கிறார்.   பின்னாள், அதன் சிதைவும், அதனால் ஏற்படும் அருவருப்புகளும் பாதிப்பைத் தருகின்றன.   அதனிடமிருந்து விலகாவிடில் ஏற்படப்போகும் சீரழிவும், அவமரியாதையும் என்னவென்பதை வாசிப்பவரின் கற்பனைக்கு விடுகிறார்.

காஃப்கா நுண்மொழி-7 & 8

படம்
காஃப்கா நுண்மொழி-7 & 8 “தீயவற்றின் வலிமையான கவர்ச்சிகளில் ஒன்று, போராட்டத்திற்கான அழைப்பு” படித்தவுடனேயே இது நமக்கு உடன்படாததொரு கருத்தாகவே படுகிறது.   போராட்டம் என்கிற சொல்மீதும், செயல்மீதும் நமக்கு ஏற்பட்டிருக்கிற புரிதலும், மதிப்பும், காஃப்காவிற்கு இல்லை என்றே தோன்றுகிறது.   தீமைகளுக்கு எதிராகத்தானே போராட்டங்கள் இருக்க முடியும், இருக்க வேண்டும்?    பிறகெப்படி தீமையின் கவர்ச்சியாக அது கூறப்படுகிறது? சில மொழி பெயர்ப்புகளில் நுண்மொழி-7 உடன்   நு.மொ-8 ம் இணைக்கப்பட்டுள்ளது,   அது, “ அது பெண்களுடன் நடக்கும் போராட்டத்தைப் போன்றது , இறுதியில் படுக்கையில் முடிவுறும் ” இந்த நுண்மொழியின் நேரடி பொருள் ஒரு தன்னம்பிக்கையற்ற மனிதனின் கருத்தாகவே நான் பார்க்கிறேன்.   மேலும் படுக்கையை இழிவு செய்வதாவும், பெண்களை சாகசம் செய்பவர்களாகவும் இது சித்தரிக்கிறது என்பதால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை. இன்னொருவகையில், தீமை தன்னுடனான போராட்டத்திற்கு அழைப்பதையே ‘கவர்ச்சியான வலிமை’ என்கிறார்கள்.   தீமையுடனான போராட்டம் எப்படி கவர்ச்சியானதாக இருக்கும்?

Kafka Aphorism - 6

படம்
காஃப்கா நுண்மொழி-6 “மனிதகுல மேம்பாட்டிற்கான திடமான தருணங்கள் கைக்கெட்டும் தூரத்தில் பூத்துக்கிடக்கின்றன.   புரட்சி பேசும் இயங்கங்கள் தங்களுக்கு முந்தையவற்றை பொருத்தமற்றவை என்று புறந்தள்ளுதல் சரியானதே.   ஏனென்றால் அப்படியேதும் நடந்துவிடவில்லை.”   மாற்றங்கள் தேவையான தருணங்களில் பழைமைவாதங்கள் புறந்தள்ள தக்கவையே.    பழைய வழக்கமான பழக்க வழக்கங்கள் மீண்டும் மீண்டும் செயல்படுவதால் மாற்றங்கள் நிகழ்ந்துவிடப் போவதில்லை.   பழைமையில் நிகழ்த்தப்படும் சிறிய வித்தியாசம் கூட மாற்றத்தின் தோற்றம்தான்.   அதுவே மனிதனின் மேம்பாட்டிற்குத் தேவையான ஒரு புரட்சி தருணம் எனலாம்.

Kafka Aphorism-5

படம்
காஃப்கா நுண்மொழி -5 “ ஒரு எல்லைக் கோட்டிலிருந்து திரும்புதல் என்ப து கிடையாது .   அதுவே அடையப்பட வேண்டிய எல்லை .” தனியாக பொருள் தரும் இந்த நுண்மொழியுடன் , ‘திரும்புதல்’ குறித்த, இதற்கு முந்தைய இரண்டு மொழிகளையும் சேர்த்து சிந்திக்க வேண்டியிருக்கிறது . மூன்றாவது நு . மொ . Paradise Lost – பொறுமையின்மை காரணமாக சொர்க்கத்தை இழந்தவர்களுக்கு வீடு ‘ திரும்புதல் ’ கிடையாது .   நான்காவது நு . மொ .   மரண ஆற்றின் கரையில் அமர்ந்துவிட்டவர்கள் திரும்புகிறார்கள் .   அந்த ஆற்றை கடந்துவிட்டவர்களுக்கு ‘ திரும்புதல் ’ என்பது கிடையாது . எனவே இந்த நுண்மொழி அடையவேண்டிய லட்சியம் குறித்ததா அல்லது திரும்புதல் இல்லாத, கடந்துவிட வேண்டிய எல்லை குறித்ததா என்பது தொடர் சிந்தனைக்குரியது. காஃப்காவின் ஆன்மீக பின்னணியில் இது மரணத்திற்கு பிந்தைய நிலை குறித்தும், சொர்க்கத்திற்கு செல்லும் பாதை குறித்தும் பேசுகிறது என்றே நினைக்கலாம். நமது வாழ்வில் நமது லட்சியம் குறித்து, திரும்புதல் என்கிற சிந்தனை இல்லாத, எல்லையற்ற பயணம் குறித்து பேசுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஜென் கதை ஒன்று ஞாபகத்திற்
படம்
காஃப்கா நுண்மொழி -4   மயான நதிக்கரையில் நின்று நீர் நக்கி உழல்கின்றன மாண்டவரின் ஆவிகள் இங்கிருந்து பாயும் அந்நதியில் இம்மை சுவைக்கிறது கடலின் கரிக்கிறது நரவாடை மூச்சடைத்து சினங்கொண்டு வீசியெறிகிறது அந்நதி மரித்தோரை கரை வீழ்ந்தோர் ஆனந்தக் கூத்தில் நன்றி சொல்லும் கோஷ்டிகானம் கேட்கிறது   நேரடியக ஆங்கில மொழியாக்கத்திலிருந்து பொருளினை கவிதையாக எடுத்துக் கொண்டேன் .   “ பிறவி பெருங்கடல் நீந்துவர் ” என்கிற குறள் நினைவிற்கு வந்து போகிறது .   “ ஆகெரான் ” என்கிற கிரேக்க புராண நதி இந்த நுண்மொழியில் குறிப்பிடப்படுகிறது .   இம்மையின் சுவையை மரித்தவரின் ஆன்மா விடாது தொடர்ந்து நக்குவதை கண்டு கோபம் கொண்ட அந்தநதி அவர்களை தூக்கி கரையில் வீசிச் செல்வதாகவும் , அவர்கள் நன்றி எனும் கோஷ்டிகானம் பாடுவதாகவும் எழுதப்பட்டுள்ளது .   முக்தி அல்லது மறுமையின் பேரு குறித்து அறியாத ஆன்மாக்கள் மீது அந்த நதி கோபம் கொள்வதாக பொருள் கொள்கிறேன் .

Kalfka Aphorisms-3

படம்
காஃப்கா நுண்மொழிகள் -3 “ மனித வாழ்வின் தீங்குகள் அனைத்திற்கும் அடிப்படை மூலகாரணிகளாக விளங்கும் இரண்டு தீயொழுக்கங்கள் :   பொறுமையின்மையும் , பொறுப்பின்மையும் .   பொறுமையின்மை மனிதர்களை சுவர் க் கத்திலிருந்து வெளியேற்றியது .   பொறுப்பின்மை அவர்களை மீண்டும் வீடு சேராதவாறு தடுக்கிறது .   ஆனால் , ஒருவேளை ஒரேயொரு அடிப்படைத் தீயொழுக்கமாக பொறுமையின்மையே இருக்கக்கூடும் .   ஏனெனில் , பொறுமையின்மையே அவர்களை வெளியேற்றியது .   அதே பொறுமையின்மையே அவர்களை மீண்டும் வீடு சேராமல் விலக்கிவைக்கிறது .” நுண்மொழி -2 – ல் பொறுமையின்மையே மனிதனின் அடிப்படை தவறுகளுக்கு காரணியென்றார் . 3- ல் மனிதர்களை சுவர் க் கத்திலிருந்து வெளியேற்றிய இரண்டு தீயொழுக்கங்கள் , பொறுமையின்மையும் , பொறுப்பின்மையும் என்கிறார் .   அடுத்த வரியிலேயே தானே முரண்பட்டு , ஒரே ஒரு தீயொழுக்கம் ‘ பொறுமையின் மை’ என்கிறார் .   (‘ சுவர்க்கத்திலிருந்து மனிதர்களை வெளியேற்றியது ’ என்பதை Paradise Lost என்பதாக புரிந்து கொள்கிறேன் ).   அவருடைய , அவர் நம்பிய கோட்பாடுகள் அதிகமாக விவிலிய கதைகளை அடிப்படையாகக் கொண்டவை என்று தெரிகிறது. ஆன்மீக வழி அணுகுமுறையி

Kafka Aphorisms -2

படம்
காஃப்கா நுண்மொழி-2 “மனிதன் இழைக்கும் தவறுகள் அனைத்தும் பொறுமையின்மையிலிருந்தே கிளைவிடுகின்றன.  முறையான அணுகுநெறியிலிருந்து உரிய காலத்துக்கு முன்பே முறிந்துவிடுகிறது.  உண்மையெனத் தோன்றுவதை உண்மையெனத் தோன்றுமாறு விவரிப்பதே அந்த அணுகுநெறி.” நான், என் புரிந்துகொள்ளும் வசதிக்காக இப்படி தகவமைத்துக் கொள்கிறேன் : “உண்மைபோல் தோன்றுவதை உண்மையேயென நிறுவுவதில், பொறுமையின்மையிலிருந்து கிளைவிடும் பிழைகள், அத்தகைய செயல்முறையை முதிராமல் தோல்வியடையச் செய்கின்றன.” நமக்கு தெரியாத, ஆதிகாலத்தில் தோன்றிவிட்ட, இந்த உலகை, இந்த அண்டசராசரத்தை, இந்த உயிர்களை, இந்த வாழ்க்கையை, இந்த  தத்துவங்களை, உண்மைபோல் தோன்றும் இவற்றை உண்மையென்று நிறுவுவதில் நாம் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறோம்.  இவற்றை உண்மையென்று நிறுவுவதற்கான நமது செயல்முறைகள், பொறுமையின்மை காரணமாக, தவறான செயல்முறைகளாக  முதிர்ச்சியடையாமல் மடிகின்றன.  ‘பாதை’ என்கிற உருவகம் தொடர்ந்து அவரது நுண்மொழிகளின் வருவதுபோலவே, method என்கிற செய்முறை அல்லது ‘அணுகுமுறை’  என்கிற கோட்பாடும் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது.   செயல்முறை என்பது எவற்றை ‘பிழை’ என்று சுட்டுகிறதோ

காஃப்காவின் நுண்மொழிகள் - என் பார்வை

படம்
புத்தக சந்தையில் யாவரும் அரங்கில் நின்று கொண்டிருந்த போது , ஜீவகரிகாலன் அப்போதுதான் வந்த Franz Kafka வின்   the Zurau aphorisms – ‘ காஃப்காவின் நுண்மொழிகள் ’ என்ற குட்டி புத்தகமொன்றை காட்டி காஃப்கா பற்றி நிறைய சொன்னார் .   மேலும் அவரின் ‘ உருமாற்றம் ’ புனைவு குறித்தும் பேசினார் .   இரண்டு புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன் . பழமொழி , பொன்மொழி , முதுமொழி , சொலவடை என பல ஆகுபெயர்களைத் தாண்டி , காஃப்காவின் மொழிகளுக்கு ‘ நுண்மொழி ’ என்று பெயர் சூட்டியிருக்கிறார் , மொழி பெயர்த்த கே . கணேஷ்ராம் .   ஒரு சொல்லின் பொருள் அதை நாம் இதுவரை எப்படி புரிந்து வந்திருக்கிறோமோ அப்படித்தான் உணர்வாகிறது .   அப்படி , இதை , நுட்பமான அல்லது நுணுக்கமான - மொழி என்று பொருள் கொள்கிறேன் .   இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் வேளை , இந்த உணர்வு வேறு மாதிரியாக மாறியும் இருக்கலாம் . இந்த ஒரு குட்டி புத்தகத்தை வைத்துக்கொண்டு காஃப்காவை எடை போடுவது , யானையை வைத்துக் கொண்டு குருடர்கள் வரைந்த ஓவியம்தான் .   இந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்களை மட்டும் எனது கண்ணோட்டத்தில் எடுத்துச் சொல்கிறேன் .   காஃப்கா பற்றி தெரிந்