காஃப்கா நுண்மொழி-33


    “தியாகிகள் தங்கள் உடலை குறைத்து மதிப்பிடுவதில்லை.  அவற்றை சிலுவையில் ஏற்றவும் மறுப்பதில்லை. இவ்வகையில் அவர்கள் தங்கள் எதிராளிக்கும் ஒப்பானவர்கள்”

 

என் எண்ணம்:

    காந்தியின் சத்தியாகிரஹங்களும், உண்ணாவிரத போராட்டங்களும் நினைவிற்கு வருகிறது.  தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதன் மூலம் எதிரியை பணிய வைக்கும் தந்திரம்.   தங்கள் நோக்கங்களை அடைவதற்காக அவர்கள் சிலுவையேறவும் தயங்குவதில்லை.  தங்கள் உடலை துன்புறுத்துவதன் மூலம் அவர்கள் எதிராளிக்கு ஒப்பானவர்கள் என்கிறார் காஃப்கா.   நுண்மொழி 29-ஐ இவ்விடத்தில் சேர்த்து சிந்திக்க வேண்டியிருக்கிறது,

    தனது எஜமானனைப் போலாக வேண்டும் என்று, அவன் கரத்திலிருந்து சவுக்கைப் பிடுங்கி தன்னை தானே அடித்துக் கொள்ளும் மிருகம்பாவம் அதற்குத் தெரியாது, அந்த சவுக்கிலிருக்கிற புதிய முடிச்சு செய்யும் ஜாலம் இதுவென்று.”

    தியாகி – எதிராளி என்ற இரண்டு துருவங்களை, நன்மை – தீமை இவற்றோடு ஒப்பிடும் போது,   தீமையை வெல்ல தன்னைத் தானே நன்மை துன்புறுத்திக் கொள்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்தானே!

    சொல்லப் போனால், எளிமை கூட ஒரு சுய மெய்வருத்தல்தான்.  அவர்களைப் பாருங்கள் தங்கள் எளிமையை முன்னிருத்தி நினைத்ததை சாதித்துவிடுவார்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29