காஃப்கா நுண்மொழி-23

காஃப்கா நுண்மொழி-23


    நேர்மையான ஒரு எதிராளியிடமிருந்து அளவற்ற ஆற்றல் நம்முள் பாய்கிறது

என் எண்ணம்

    ஒரு எதிராளியிடமிருந்து ஆற்றல் நம்முள் பாய்கிறதா?  காஃப்கா சொல்லும் அனைத்தையும் நாம் ஒப்புக் கொள்ளவேண்டும் என்று அவசியமில்லை.  மறுப்புகளும் இருக்கலாம்.  ஆனால் இந்த நுண்மொழி, நாம் நம் அனுபவத்தில் என்ன உணர்ந்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து ஒப்புக் கொள்ளக் கூடியதாகவும், மறுப்பதாகவும் இருக்கலாம்.  ஒரு பொதுப்புத்தியில், இப்படித் தோன்றலாம்:- ஒரு எதிராளி நம்மிடம் நேரடியாக மோதும் போது நம்முள் ஒரு உத்வேகம் கிளம்பி அவனை வீழ்த்த முயற்சிக்கிறோம்.  இருவருக்கும் அப்படியே.  அந்த உத்வேகத்திற்கு அவனுள் இருந்து பாயும் ஆற்றல் என்று பொருள் கொள்வது சரியா?  இருவருக்கும் ஒரு போட்டி நிகழும் போது  கூடுதல் ஆற்றல் பெருகுவது உண்மைதான்.  இருவரில் ஒருவர் தோற்கும் போது அவருக்கு ஆற்றல் பெருகவில்லை என்று பொருள் இல்லை.

    நான் எனது பள்ளிக் காலங்களில் இதை உணர்ந்திருக்கிறேன் என்று சொல்லலாம்.  ஒவ்வொரு தேர்விலும், எனக்கும் சக மாணவனுக்கும் போட்டியிருந்ததுண்டு.  யார் முதல் ரேங்க் பெருவது என்று போட்டியிடுவோம்.  மாறி மாறி அதில் வெல்வோம்.  அப்போது ஒரு ஆற்றல் பிறக்கும்.  அது அவனிலிருந்து நமக்குள் பாய்ந்ததாக அர்த்தம் கொள்வதா?

காஃப்கா இக்கருத்தை வாலியின் கதையிலிருந்து எடுத்திருப்பாரா?  காஃப்காவின் இக்கருத்திருக்கு ஒரு விளக்கம் இருக்கிறது.  அதாவது, எதிரி நேர்மையானவனாக இருக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை.  வாலியின் எதிரி நேர்மையாக நடந்த கொண்டாரா என்பது கேள்வி.

நேர்மையற்ற ஒரு எதிரியிடமிருந்து நமக்கு ஆற்றல் பிறப்பதில்லை என்பது எனது அனுபவம்.  யூ டூ புரூட்டஸ்என்று சரியும் போது, சீசருக்கு எந்த ஆற்றலும் கிடைத்திருக்காது, இல்லையா?

நிச்சயமாக அது ஜார்ஜ் ஃபிளாய்டிற்கு கிடைக்கவில்லை என்பது நிகர்சனம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29