காஃப்கா நுண்மொழி-21

காஃப்கா நுண்மொழி-21


“ஒரு கல்லை நமது கை எத்தனைக்கெத்தனை இறுக்கமாக பிடிக்கிறதோ, அத்தனை அதிக தூரம் அக்கல் வீசியெறியப்படும்.  அத்தனை தூரத்திற்கு ஒரு வழியும் இருக்கும்”

என் எண்ணம்:

ஒரு கல்லை எவ்வளவு அதிக தூரம் எறிய வேண்டும் என்று நினைக்கிறோமோ அவ்வளவு இறுக்கமாகப் பிடிக்கிறோம்.  அதே நேரம் அதை தேடிச் செல்வதற்கான வழியும் இருக்கிறது என்றால், அப்பொருள் தொலைந்துவிடுவதில்லை, அது நமக்காகக் காத்திருக்கலாம்.

இப்படியும் பொருள் கொள்ளலாம்:  ஒரு பொருளின் மேல் எவ்வளவு அதிக பற்று வைக்கிறோமோ, அவ்வளவு தூரம் அது நம்மிடமிருந்து விலகிச் செல்கிறது.  தொலைந்த பொருள் மாறிவிடுவதில்லை, திரும்ப கிடைக்காது என்றும் இல்லை. அதை மீண்டும் தேடிச் செல்ல ஒரு வழியும் இருக்கிறது என்று நம்பிக்கை தருகிறார்.  அந்த வழி வீடு திரும்புதலுக்கான சாத்தியமாகவும் இருக்கலாம். 

ஆனால் நமது இலக்கிய மரபு பற்றற்று வாழ்வதையே வலியுறுத்துகிறது. பற்றறுத்தலில் மீளுதல் கிடையாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29