காஃப்கா நுண்மொழி-32


“சொர்க்கத்தை ஒரே ஒரு காகத்தால் அழித்துவிடமுடியும் என்று வலியுறுத்த காகங்கள் விரும்புகின்றன.  இது மறுக்கமுடியாத உண்மையாக இருந்தாலும், சொர்க்கத்திற்கு எதிராக இதில் ஏதும் இல்லை.  மாற்றிச் சொல்வதென்றால் காகங்களால் ஏதும் இயலாது என்பதுதானே சொர்க்கம்”

 

என் எண்ணம்:

    நம்ம இடத்துல இருந்து ஆரம்பிப்போம்.  ஒரு காக்கை ஒரு எருமைமேல் அமர்ந்திருக்கிறது.  இந்த எருமையின் முதுகின்மேல் அமர்ந்து நான் பரிபாலனம் செய்யாவிட்டால், இவைகள் மேய்ச்சலுக்கு செல்லாது என்று ஒரு காகம் கூறினால் எப்படியிருக்கும்?  எருமைக்கு காகம் ஒரு பொருட்டா?  வானில் பறந்து திரிவதால், தான் இல்லாவிட்டால் சொர்க்கம் இல்லை என்று காகம் நினைத்துக்கொள்ளுமாம்.  ஆனால் சொர்க்கத்தின் பிரமாண்டத்திற்கு முன் காகம் ஒரு பொருட்டல்ல.  இதைத்தான் சொர்க்கம், காகம் என்று ஒப்பிட்டுப் பேசுகிறார் காஃப்கா.  ஆனால் தொடர்ந்து முந்தைய நுண்மொழிகளில் காஃப்கா ‘நன்மை’ ‘தீமை’ என இரண்டையும் வெவ்வேறு ஒப்பீடுகளில் வெளிப்படுத்தி-யிருக்கிறார்.  அந்த வரிசையில் சொர்க்கத்தை நன்மையாகவும், காகத்தை தீமையாகவும் கருதிப் பார்க்க வேண்டியுள்ளது.

    ‘தீமை’ தன்னை நன்மையோடு ஒப்பிட்டு எடைபோட வலியுறுத்துகிறது.  ஆனால் ‘நன்மை’ தன்னை தீமையோடு ஒப்பிடுவதை பற்றி பேசுவதில்லை.  சொல்லப்போனால் தீமையின் அழிவுதானே நன்மை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29