காஃப்கா நுண்மொழி-31

காஃப்கா நுண்மொழி-31


    சுயபலம் என்பதை நான் தேடித் திரிவதில்லை.  எனது முடிவற்ற ஞான வீச்சின் எல்லைகளுக்குள் ஒரு சிறிய வரம்பு வரையாவது ஆற்றலுடன் இருக்க விரும்புவது என்பது சுயபலம்.  என்னைச் சுற்றிய  அந்த சுழலை விளக்கச் சொல்வதாய் இருந்தால், அவை தரும் முரண்களின் வெளிச்சத்தைப் பெற்றுக் கொள்வதைத் தவிர, வேறெதுவும் செய்யாமல் அந்த மாபெரும் சூட்சுமத்தை, செயலற்று அமைதியாய் வியந்து அவதானித்திருப்பேன்.

என் எண்ணம்:

    இந்த நுண்மொழியை ஆங்கிலத்திலிருந்து, உள்வாங்கி, தமிழுக்கு மொழி பெயர்க்க இரண்டு நாட்களுக்கு மேலாகிவிட்டது எனக்கு.  எனது அமைதியற்ற மனநிலையும், வேறு வேலைகளும் கூட காரணமாக இருக்கலாம்.

    இதற்கு முந்தைய நுண்மொழியில் “நற்குணம் என்பது ஒருவகையில் வசதியற்றது” என்று கூறியிருந்தார்.  உலகின் அனைத்து தத்துவங்களும் நற்குணத்தையும், நற் செயல்களையும் போற்றி பாராட்டும் பொழுது, காஃப்கா மட்டும் இப்படிக் கூறுகிறார்.  இதன் தொடர்ச்சியாக தனது சுயபலம் என்ன என்பதையும் பற்றியும் சிந்திக்கிறார்.  நற்குணம் வசதியற்றது என்று தோன்றும் போது, சற்று அமைதியாக இருப்பது நலம் என்று அவருக்கு தோன்றியிருக்கலாம்.  அதன் விளைவாகவே தன் சுயபலம் என்ன என்பதை தேடித் திரிவதில்லை என்கிறார்.  ஆனால் தன் ஞான வீச்சின் ஒரு வரையறைக்குள் ஆற்றலுடன் இயங்குவதே சுயபலம் என்றும் கூறுகிறார்.

    இந்த சுயபலத்தின் இயக்கத்திற்கும், நற்குணத்தின் வசதியற்ற தன்மைக்கும் இடையே ஏற்படும் முரண்பாடு தரும் அறிவை அவதானித்திருப்பதே அவரது செயல் என்கிறார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29