இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காஃப்கா நுண்மொழி-39

படம்
காஃப்கா நுண்மொழி -39 “ தீமைக்கான விலையை ஒருவன் அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்க முடியாது . ஆனாலும் அவன் தொடர்ந்து முயன்று கொண்டேதான் இருக்கிறான் . மாவீரன் அலெக்சாண்டர் தன்னுடைய இளமைக்கால வெற்றிகள், அவன் உருவாக்கிய பிரம்மாண்டமான போர்ப்படை , இந்த உலகை மாற்றி விடுவதற்கான ஆற்றல் கொண்ட உத்வேகம் , யாவும் இருந்தும்கூட அவன் ஹெலஸ்பாண்ட் என்ற கால்வாயை கடக்காமல் தனது பயணத்தை நிறுத்தி இருப்பார் என்பது யூகிக்கத் தக்கது . அது அவனுடைய பயத்தினால் அல்ல, திடமற்ற     முடிவினால் அல்ல, பலவீனத்தினாலும் அல்ல ஆனால்   அவனுடைய சோர்ந்த கால்களினால் கூட இருக்கலாம் .” என் எண்ணம் : தீமைக்கான விலையை நாம் அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்க முடியாது என்று சொல்லும்போது பாவத்தின் சம்பளம் மரணம் என்கிற பைபிள் சொற்றொடர் நினைவுக்கு வருகிறது . அப்படி என்றால் தீமைக்காண விலை என்பது மொத்தமாக நாம் கொடுக்கப் போகிற மரணம் என்று பொருள்படுகிறது . ஒவ்வொரு தீமைக்கும் அவ்வப்போது விலைகொடுத்து நாம் அதை சரி செய்துவிட முடியாது , முதலிலேயே மொத்தமாக கொடுப்போம் என்று காஃப்கா சொல்கிறார் .   அதாவது ஒருவன் தீமையின் பயனால் தொடர்ந்து மூழ

காஃப்கா நுண்மொழி-38

படம்
காஃப்கா நுண்மொழி -38     நித்தியத்தை அடைவதற்கான பாதை இத்தனை எளியதா என்று ஆச்சரியப்பட்டான் ஒருவன் .   ஏனென்றால் , அவன் மலையிறக்கப் பாதையில் வேகமாய் பயணித் திருந்தான். என் எண்ணம் : நித்தியம் என்றால் என்ன ? நம்மில் பலர் சில இரங்கல் கடிதங்கள் எழுதியிருப்போம் .   அவற்றில் , “I pray to God to rest his peace at eternal peace” என்பது ஒரு சொற்றொடர் .   இந்த eternal peace நிரந்தர அமைதியை குறிக்கிறது . நிலையாமையை பேசும் நமது தத்துவங்கள் தான் நித்தியத்தையும் பேசுகின்றன .   இம்மையில் இருக்கிற நிலையாமை என்பது நிதர்சனம் .   ஆன்மீகத்தில் நித்தியம் குறித்த நம்பிக்கை இருக்கலாம் .   பொதுவாக ஒரு நடப்பு சாத்தியமுள்ள வாழ்வியல் முறையில் நித்தியம் என்பது ஒரு மாயை தான் . நமது கடிகாரங்களாலும் , நாட்காட்டிகளாலும் கணக்கிடப்பட முடியாதது நித்தியம் என்கிறார்கள் . என்னை பொறுத்தவரையில் , அனுபவ பூர்வமாக , பொருள் புரிந்து ‘ இதுதான் நித்தியம் ’ என்று என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை .   நித்தியம் என்கிற மாயையை உணர்ந்து கொண்டவர்கள் யாராவது இருக்க முடியுமா என்ன ?   அது கடவுளை உணர்ந்து கொண்டேன் என்று சொல்வது ப
படம்
காஃப்கா நுண்மொழி -37 இல்லாத ஏதோ ஒன்றை அவன் வைத்திருந்தான் என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போது அவனிடம் தடுமாற்றமும் நடுக்கமும் இருந்தது . என் எண்ணம்     ‘இல்லாத ஏதோ ஒன்றை அவன் வைத்திருந்தான்’ என்று கூறும் போது நுண்மொழி-35 லிருந்து தொடர்பு படுத்தி பார்க்க வேண்டியிருக்கிறது.   ‘‘வைத்திருத்தல்’ என்று ஏதும் இல்லை ‘இருத்தல்’ மட்டுமே ஏக்கம்” - என்பது தான் முந்தைய மொழி.   ‘இருத்தல்’ என்பதே ஏக்கம் ஆகிவிட்ட ஒருவனிடம், அவன் இல்லாத ஒன்றை வைத்திருந்தான் என்று குற்றம் சாட்டுவது, அவனிடம் தடுமாற்றத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்கிறார்.    ‘இருத்தல்’ மட்டுமே ஆகிவிட்ட, கடைசி மூச்சிற்கு ஏங்குகிற ஒரு கால கட்டத்தில், அதாவது முற்றும் துறந்துவிட்ட ஒரு மனநிலையில், அவன் ’ஏதோ வைத்திருந்தான்’ என்று இல்லாத ஒன்றைக் கூறும் போது, அவன் தவறு செய்தவன் போல் தடுமாறுகிறான், அவன் உடல் நடுங்குகிறது என்கிறார் காஃப்கா.   இந்த நுண்மொழியில் முதன் முறையாக, ஒரு உடல் சார்ந்த (புறம் சார்ந்த) பின் விளைவை எழுதியிருக்கிறார் காஃப்கா.   அவன் தனது இருத்தலுக்கு ஏதாவது பங்கம் வந்துவிடுமோ என்று பயந்ததால் ஏற்பட்ட தடுமாற

காஃப்கா நுண்மொழி-36

படம்
காஃப்கா நுண்மொழி -36     முன்பெல்லாம் நான் கேட்ட கேள்விகளுக்கு ஏன் பதில் கிடைப்பதில்லை என்று புரிந்ததில்லை .   இப்போது அத்தகைய கேள்விகளை எந்த தைரியத்தில் கேட்டேன் என்றும் புரியவில்லை .   ஆனால் நான்தான் கேட்டேனா என்பதையும் நம்பமுடியவில்லை .   என் எண்ணம்     இளைய வயதில் , இப்படித்தான் தோன்றியவற்றை துடுக்குத்தனமாக கேட்டுவிடுகிறோம் .   பிறகு வயதும் முதிர்ச்சியும் ஏற ஏற , எப்படி இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனமான கேள்விகளை கேட்டோம் என்றும் தோன்றுகிறது .   நம் அசட்டுத்தனம் குறித்தும் ஆச்சரியப்படுகிறோம் .     படிப்பு முடிந்த கையோடு ஒரு தனியார் அலுவலகத்தில் வேலையிலிருந்தேன். இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி இரண்டு வயதிருக்கலாம்.   ஆண்களுக்கான அறையில் நிறைய கிசுகிசுக்கள் பேசிக்கொள்வது வழக்கம்தானே.   அப்போது காமம் சார்ந்த ஒரு குறியீட்டு வார்த்தையை தெரிந்துகொண்டேன்.   அடுத்த ஒன்றிரண்டு நாளில் ஒரு நண்பன் அலுலவகத்தின் கூடத்தில் வைத்து என்னை கிண்டல் செய்துவிட்டான்.   ‘பிலக்கா பையன், இன்னம் மீசை கூட முளைக்கலை, உனக்கென்னடா தெரியும்’ என் று சீண்டிவிட்டான்.   அந்தக் கூடத்தில் ஆண்களும் பெண்களுமாக ஒ

காஃப்கா நுண்மொழி-35

படம்
காஃப்கா நுண்மொழி-35 “பேறு என்றெதுவும் இல்லை, ‘இருத்தல்’ மட்டுமே.   கடைசி மூச்சிற்கும், மூச்சு திணறலுக்கும் ஏங்கும் ‘இருத்தல்’ மட்டுமே.” என் எண்ணம்:     மனிதன் வாழ்நாள் முழுவதும், பொருள் வளத்தை மேம்படுத்திக் கொள்ளவும், அதனால் பல விஷயங்களை தனது ‘உடைமை’ யாக்கிக் கொள்ளவும் பெருமுயற்சி எடுக்கிறான்.   செல்வப் பேறு மட்டும் அல்ல, நல்ல பெயர், புகழ்ச்சி, புண்ணியம், சுற்றம் என்று எல்லாவற்றிற்கும் போராடுகிறான்.   ஆனால் ஒரு கட்டத்தில், உடல் நலமற்றுப் போய், உடலுடன் போராடி, உயிருடன் போராடி சிரமம் தாங்காமல் எப்போது மரணம் தழுவும் என்று ஏங்கும் போது, ‘பேறு’ என்று எதுவும் இல்லை, இருத்தல் மட்டுமே தொடர்கிறது.   அப்போதைய ஏக்கம், கடைசி மூச்சிற்கானதாகவும், மூச்சுத் திணறலுக்கானதாகவும் இருக்கிறது.     முந்தைய நுண்மொழியில் எடுத்துரைத்த ‘அயர்ச்சி’யை தொடர்ந்து காஃப்கா இருத்தல் குறித்து பேசுகிறார். அந்த அயர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட விரக்தியில் இந்த நுண்மொழி தோன்றியிருக்கலாம். ‘இருத்தலின்’ நோக்கம் ‘இல்லாமல் போவது’ என்று நேரிடையாக புரிந்தாலும்,   கடைசி மூச்சிற்கான ஏக்கம் என்பது, கடைசி மூச்சுவரை ‘இருத்தலி’ன்

காஃப்கா நுண்மொழி-34

படம்
காஃப்கா நுண்மொழி-34   “தனது அலுவலகத்தின் ஒரு மூலையில் வெள்ளையடித்துவிட்டு அவன், போருக்குப் பின்னான ஒரு தளபதியைப் போல் அயர்ந்துவிடுகிறான்”   என் எண்ணம்:     நானும் பார்த்திருக்கிறேன்.  நான் பார்க்கிற வேலைதான் மிகுந்த கடினமானதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இருக்கிறது என்று இறுமாந்ததுண்டு.  அதே நேரம் உடன் இருக்கிற (சும்மாவே இருக்கிற) சக, கீழ் நிலை ஊழியர்களும் தங்களது வேலைதான் சிரமம் நிறைந்தது என்று அலுத்துக் கொள்வார்கள்.  சும்மா இடுப்பில் கைவைத்துக் கொண்டு மேஸ்திரி வேலை பார்க்கிற மேலதிகாரிகளும் அதே போல்தான் அலுத்துக் கொள்கிறார்கள்.     உங்களுக்கென்ன, மாசம் பொறந்த சம்பளம், நாங்க அப்படியா ஓடியாடி உழைச்சாதான் காசு பாக்கமுடியும் என்று அலுத்துக்கொள்ளும் நண்பர்களும் உண்டு.     வெள்ளையடிக்கிற மனிதனின் அயர்ச்சியும் நியாயமானதுதான்.  அவனது உழைப்பும் அயர்ச்சியும் யாராலும் பாராட்டப்படுவதில்லை.  ஒருவனது உழைப்பு என்று சொல்லும் போது அது போர்வீரனின் உழைப்பிற்கு இணையானதுதான்.  இருவரும் உழைக்கிறார்கள்.  ஆனால் ஒருவனது உழைப்பு எந்த மாற்றத்தையும், விளைவையும் தருவதில்லை. அவனது உழைப்பு நின்று போனாலும்
படம்
காஃப்கா நுண்மொழி -33     “தியாகிகள் தங்கள் உடலை குறைத்து மதிப்பிடுவதில்லை.   அவற்றை சிலுவையில் ஏற்றவும் மறுப்பதில்லை. இவ்வகையில் அவர்கள் தங்கள் எதிராளிக்கும் ஒப்பானவர்கள்”   என் எண்ணம்:     காந்தியின் சத்தியாகிரஹங்களும், உண்ணாவிரத போராட்டங்களும் நினைவிற்கு வருகிறது.   தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதன் மூலம் எதிரியை பணிய வைக்கும் தந்திரம்.    தங்கள் நோக்கங்களை அடைவதற்காக அவர்கள் சிலுவையேறவும் தயங்குவதில்லை.   தங்கள் உடலை துன்புறுத்துவதன் மூலம் அவர்கள் எதிராளிக்கு ஒப்பானவர்கள் என்கிறார் காஃப்கா.    நுண்மொழி 29-ஐ இவ்விடத்தில் சேர்த்து சிந்திக்க வேண்டியிருக்கிறது,     “ தனது எஜமானனைப் போலாக வேண்டும் என்று , அவன் கரத்திலிருந்து சவுக்கைப் பிடுங்கி தன்னை தானே அடித்துக் கொள்ளும் மிருகம் – பாவம் அதற்குத் தெரியாது , அந்த சவுக்கிலிருக்கிற புதிய முடிச்சு செய்யும் ஜாலம் இதுவென்று .”     தியாகி – எதிராளி என்ற இரண்டு துருவங்களை, நன்மை – தீமை இவற்றோடு ஒப்பிடும் போது,    தீமையை வெல்ல தன்னைத் தானே நன்மை துன்புறுத்திக் கொள்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்தானே!     சொல்லப் போனால், எளிமை
படம்
காஃப்கா நுண்மொழி-32 “சொர்க்கத்தை ஒரே ஒரு காகத்தால் அழித்துவிடமுடியும் என்று வலியுறுத்த காகங்கள் விரும்புகின்றன.   இது மறுக்கமுடியாத உண்மையாக இருந்தாலும், சொர்க்கத்திற்கு எதிராக இதில் ஏதும் இல்லை.   மாற்றிச் சொல்வதென்றால் காகங்களால் ஏதும் இயலாது என்பதுதானே சொர்க்கம்”   என் எண்ணம்:     நம்ம இடத்துல இருந்து ஆரம்பிப்போம்.   ஒரு காக்கை ஒரு எருமைமேல் அமர்ந்திருக்கிறது.   இந்த எருமையின் முதுகின்மேல் அமர்ந்து நான் பரிபாலனம் செய்யாவிட்டால், இவைகள் மேய்ச்சலுக்கு செல்லாது என்று ஒரு காகம் கூறினால் எப்படியிருக்கும்?   எருமைக்கு காகம் ஒரு பொருட்டா?   வானில் பறந்து திரிவதால், தான் இல்லாவிட்டால் சொர்க்கம் இல்லை என்று காகம் நினைத்துக்கொள்ளுமாம்.   ஆனால் சொர்க்கத்தின் பிரமாண்டத்திற்கு முன் காகம் ஒரு பொருட்டல்ல.   இதைத்தான் சொர்க்கம், காகம் என்று ஒப்பிட்டுப் பேசுகிறார் காஃப்கா.   ஆனால் தொடர்ந்து முந்தைய நுண்மொழிகளில் காஃப்கா ‘நன்மை’ ‘தீமை’ என இரண்டையும் வெவ்வேறு ஒப்பீடுகளில் வெளிப்படுத்தி-யிருக்கிறார்.   அந்த வரிசையில் சொர்க்கத்தை நன்மையாகவும், காகத்தை தீமையாகவும் கருதிப் பார்க்க வேண்டியுள்ளது.

காஃப்கா நுண்மொழி-31

படம்
காஃப்கா நுண்மொழி -31     “ சுயபலம் என்பதை நான் தேடித் திரிவதில்லை .   எனது முடிவற்ற ஞான வீச்சின் எல்லைகளுக்குள் ஒரு சிறிய வரம்பு வரையாவது ஆற்றலுடன் இருக்க விரும்புவது என்பது சுயபலம் .   என்னைச் சுற்றிய   அந்த சுழலை விளக்கச் சொல்வதாய் இருந்தால் , அவை தரும் முரண்களின் வெளிச்சத்தைப் பெற்றுக் கொள்வதைத் தவிர , வேறெதுவும் செய்யாமல் அந்த மாபெரும் சூட்சுமத்தை , செயலற்று அமைதியாய் வியந்து அவதானித்திருப்பேன் . ” என் எண்ணம்:     இந்த நுண்மொழியை ஆங்கிலத்திலிருந்து, உள்வாங்கி, தமிழுக்கு மொழி பெயர்க்க இரண்டு நாட்களுக்கு மேலாகிவிட்டது எனக்கு.   எனது அமைதியற்ற மனநிலையும், வேறு வேலைகளும் கூட காரணமாக இருக்கலாம்.     இதற்கு முந்தைய நுண்மொழியில் “நற்குணம் என்பது ஒருவகையில் வசதியற்றது” என்று கூறியிருந்தார்.   உலகின் அனைத்து தத்துவங்களும் நற்குணத்தையும், நற் செயல்களையும் போற்றி பாராட்டும் பொழுது, காஃப்கா மட்டும் இப்படிக் கூறுகிறார்.   இதன் தொடர்ச்சியாக தனது சுயபலம் என்ன என்பதையும் பற்றியும் சிந்திக்கிறார்.   நற்குணம் வசதியற்றது என்று தோன்றும் போது, சற்று அமைதியாக இருப்பது நலம்

காஃப்கா நுண்மொழி-30

படம்
காஃப்கா நுண்மொழி-30  “நற்குணம் என்பது ஒருவகையில் வசதியற்றது”   என் எண்ணம்:        என் தந்தை, ஜெயந்தன் கூறக் கேட்டிருக்கிறேன், “நல்ல குணம் என்பதொரு விலங்கு” என்று.   சில பல வாழ்க்கை நிகழ்வுகளில், நேரங்களில் அதை உணர்ந்திருக்கிறேன்.   நல்லவனாக வாழ முயற்சிக்கும் மனிதர்களுக்கு இது சட்டென்று ‘ஆம்’ என்று படும்.      நல்லவன், சாலையோரம் சுவற்றில் சிறுநீர் கழிக்க முடியாது.      நல்லவன், குடும்ப பிரச்சினைக்குக் கூட, வீட்டிற்குள் யாருடனும் சண்டை, சத்தம் போட முடியாது.      ஒரு அவசரத்திற்கு யாரிடமும் கடன் கேட்டுக் கை நீட்ட முடியாது.   கொடுத்த கடனை திரும்ப கேட்க முடியாது.      அதிகாரத்திற்கு எதிராக வாய் திறக்க முடியாது.      ஆசையில் காதலிக்கு முத்தம் கொடுக்க அவசரப்பட முடியாது.      ஓடிப் போய் அவசரத்திற்கு நகரும் பேருந்தில் ஏற முடியாது.      ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும், கேள்வி கேட்க முடியாது.      நன்மை, புரிந்துகொள்வதற்கு சிரமமும் குழப்பமும் தரக்கூடியது.   எது நன்மை என்கிற நிரந்தரத் தேடல் தொடர்கிறது.   தீமையோ நம்மை நோக்கி எளிதாக வந்தடைந்துவிடுகிறது.   ஓரிடத்தில் தீமை அங்கீகரிக்க

காஃப்காவின் நுண்மொழி-29

படம்
காஃப்காவின் நுண்மொழி -29     “ தீமையை உள்வாங்கிக் கொள்வதற்கான உனது தரம் தாழ்ந்த நடவடிக்கைகள் உண்மையில் உன்னுடையது அல்ல .  அவை தீமையினுடையவை .”     “ தனது எஜமானனைப் போலாக வேண்டும் என்று , அவன் கரத்திலிருந்து சவுக்கைப் பிடுங்கி தன்னை தானே அடித்துக் கொள்ளும் மிருகம் – பாவம் அதற்குத் தெரியாது , அந்த சவுக்கிலிருக்கிற புதிய முடிச்சு செய்யும் ஜாலம் இதுவென்று .” என் எண்ணம் :     புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வது ஒரு இழிவான செயல் .  எஜமானன் கையில் சவுக்கு இருப்பதால்தான் அவன் எஜமானன் என்று நினைத்து , அச்சவுக்கால் அடிமை தன்னைத் தானே அடித்துக் கொள்வது முட்டாள்தனம் .  சவுக்கு உன்னுடையதில்லை,  ‘ தீமை ’ யினுடையது என்கிறார் காஃப்கா .     தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதேயாம்   –   தீயார் குணங்களுரைப்பதுவும் தீதே யவரோ      டிணங்கி யிருப்பதுவுந் தீதே .
படம்
காஃப்கா நுண்மொழி-28     “தீமையை நாம் ஒருமுறை அனுமதித்துவிட்டால், பிறகு எப்போதுமே தன்னை நம்பவேண்டும் என்று அது நம்மை வற்புறுத்துவதில்லை” என் எண்ணம்:     ருசி கண்ட பூனை என்று நம்மிடம் ஒரு பழமொழி இருக்கிறது.     எத்தவொரு தீமையும், அதை நாம் ஒப்புக்கொள்ளும் வரைதான் தீமையாகத் தெரியும்.   ஒருமுறை ருசி கண்டுவிட்டால், தீமை காட்டும் மயக்கம், அது தரும் சௌகரியம், அது தரும் அதிகாரம், அதனால் விளையும் வளமை என ஆசைகாட்டி தீமை நம்மை இழுத்து தன் சிறையுள் அடைத்துவிடும்.   தீமை தரும் போதையிலிருந்து விடுபட முடியாது.     சாத்தான் ஒரே ஒருமுறைதான் ஆப்பிளை உண்ணும்படி ஏவாளைத் தூண்டியது.   பிறகு அவர்களுக்கு சொர்க்கத்தில் இடமளிக்கப்படவில்லை.     காஃப்கா தீமையை நாம் ‘செய்தால்….. ’ என்ற வினைச்சொல்லை பயன்படுத்தவில்லை. தீமையை நாம் ஒருமுறை அறிந்தால் அல்லது அங்கீகரித்தால் போதும் மறுமுறை அது தன்னை நம்ப வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை என்கிறார்.   அத்தனை எளிதாக நம்மை பற்றிக் கொள்ளக்கூடியது ‘தீமை’.   நாம் தீங்கு செய்வதே இல்லை என்று பேசிக்கொண்டிருக்கும் போதே, தீங்கு செய்துகொண்டிருக்கிறோம் என்பதே ‘தீமை’யின் பாத

காஃப்கா நுண்மொழி-27

படம்
காஃப்கா நுண்மொழி-27     “நேர்மை நம்முள் விதைக்கப்பட்டிருக்கிறது.   தீமையைச் செய்யுமாறு நமக்கு போதிக்கப்படுகிறது”.   என் எண்ணம்:     ஒரு குழந்தை பிறக்கும்போது நல்லவனாகவே பிறப்பதாகவும், பிறகு அவனுள் திணிக்கப்படும் கற்பிதங்களினாலேயே அவன் நல்லவனாகவோ தீயவனாகவோ மாறுகிறான் என்பது காலங்காலமாக நாம் நம்பி வந்திருக்கிற கருத்துரு.   காஃப்காவின் கருத்தில், நேர்மை பின்னாட்களில் போதிக்கப்படுவதே இல்லையா என்ற கேள்வி எழுகிறது.     இக்கருத்துக்கள் அறிவியல் வளர்ச்சிக்குப் பின் மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றன என்றே நினைக்கிறேன்.     ஒவ்வொருவடைய ஜீன்களிலும், டி.என்.ஏ.களிலும் பெற்றோருடைய குணாம்சங்கள் கடத்தப்படுகின்றன.   பிறகு சமூக சூழ்நிலையால் ஒவ்வொரு குணமும் தூண்டப்பட்டு அவை நடைமுறைக்கு வருகின்றன. நமது வாழ்க்கை முறையில் நல்லது கெட்டது என்பது, கறுப்பு வெள்ளை போன்று தெளிவான வரையறைகள் கொண்டது அல்ல.   ஒருவனுக்கு நல்லதாகப்படுவது, இன்னொருவனுக்கு கெட்டதாகப் படுகிறது. ‘கருமி’ என்பது போன்ற குணாம்சங்கள் நல்லதா கெட்டதா என்று வரையறுக்க முடியாதவையாகவே உள்ளன. தீய எண்ணங்கள் திணிக்கப்படுகின்றன என்று எ

காஃப்கா நுண்மொழி-26

படம்
காஃப்கா நுண்மொழி-26      “ஒளிந்து கொள்வதற்கான மறைவிடங்கள் ஏராளமாய் இருக்கின்றன.   ஆனால் இரட்சிப்பு ஒன்றே ஒன்றுதான்.   இரட்சிப்பிற்கான சாத்தியங்கள் மறைவிடங்களைப் போல் ஏராளம்.   கடைவழிக்கான பாதை ஏதுமில்லை, ஆனால் அப்பாதை தயக்கங்களால் ஆனாது”. என் எண்ணம்:         பாதை குறித்த முந்தைய நுண்மொழிகளை நினைவுபடுத்தி இதற்கு பொருள் தேட வேண்டியுள்ளது.   குறிப்பாக, 15வது நுண்மொழி, சருகுகளால் மூடப்படும் பாதை.           கடைவழிக்கான பாதையில் முயற்சியை கைவிட்டு நாம் ஒளிந்துகொள்வதற்கான இடங்கள், காரணங்கள், காரணிகள் நிறைய உள்ளன.   நம்மை திசை மாற்றும் பொய்யான பாதைகள் அவை.   கடைவழிக்கு உண்மையான பாதை ஒன்றே ஒன்றுதான்.   நின்று கொண்டிருக்கும் இடத்தில் உன் பாதங்களின் அளவே தெரியும் பாதைதான் தற்போதைக்கு உண்மை (நு.மொ.25) கடைவழிக்கு பாதை ஏதுமில்லை.   அதாவது அப்பாதை சருகுகளால் மூடப்பட்டிருக்கிறது.   சருகுகளை நீக்கி அப்பாதையை கண்டுணர வேண்டியுள்ளதால், அப்பயணம் தயக்கங்களால் நிரம்பியுள்ளது.     இங்கு நான் ‘கடைவழி’ என்று குறிப்பிடுவதை காஃப்கா தன் மூலத்தில் என்னவென்று எழுதியிருக்கிறார் எனப் புரியவில்லை.   ஆங்கில மொழி ப

காஃப்கா நுண்மொழி-25

படம்
காஃப்கா நுண்மொழி-25     “வாழ்வை நோக்கி முன்னேறுவதைத் தவிர வேறு எப்படி நாம் வாழ்வை கொண்டாடிவிட முடியும்?” என் எண்ணம்:     தேர்வுக்கு படிப்பதைத் தவிர வேறு எப்படி தேர்வின் முடிவை கொண்டாடிவிட முடியும்?   முயற்சியும் விளைவும், இரண்டும் நேர்திசையில் நகர்வன அல்லவா?   சரி, இது சிறிய எடுத்துக்காட்டு.     ஆனால், வாழ்வில் இரண்டும் உண்டு, ஒன்று வாழ்வில் இருந்து விலகுதல், இராண்டாவது வாழ்வை நோக்கி நகர்தல்.   முற்றும் துறத்தல் இந்த வாழ்வினின்று நீங்கி முக்தியடைதல் என்கிற எல்லையற்ற ஆனந்தம் என்பது நமக்கு கற்பிக்கப்படுவது.     யாதனின் யாதனின் நோங்கியான் நோதல்     அதனின் அதனின் இலன் இந்த வாழ்வில் இருந்து விலகிச் சென்ற ஒருவன் மீண்டும் வாழ்வை நோக்கி பயணிக்கும் போது மகிழ்ச்சியடைகிறான். காஃப்கா, இதுவரை பார்த்த நுண்மொழிகளில் தொடர்ந்து பயணிப்பதை பற்றியும், யாரும் அடைய முடியாத எல்லைக் கோட்டை அடைவது பற்றியும், திரும்புதல் பற்றியுமே மீண்டும் மீண்டும் பேசுகிறார். சுருங்கச் சொன்னால், ‘நகர்தல்’ என்பது வாழ்வில் மகிழ்ச்சியை தருவிக்கிற ஒன்றாக இருக்கிறது என்பதை காஃப்கா உணர்த்துகிறார். மையவிலக்கு விசையு

காஃப்கா நுண்மொழி-24

படம்
காஃப்கா நுண்மொழி-24     “உன் பாதங்களின் அளவைவிட, நீ நிற்கும் பூமியின் அளவு பெரிதாக இருந்துவிட முடியாது என்கிற உனது அதிர்ஷ்டத்தை பற்றிக்கொள்” என் எண்ணம்:     காஃப்கா இந்த பூமியில் நாம் நிற்பதே பெரும் அதிர்ஷ்டம் என்கிறார்.   நிற்பதற்கு மேல் எதையும் எதிர் பார்த்துவிடாதே என்பது தானே அவருடைய கருத்து!   இது ஒரு அடிப்படைவாதியின் கருத்தாக எனக்குப்படுகிறது.  தனது விடலைப் பருவத்தில் தன்னை நாத்திகவாதியகவும், சமத்துவ கொள்கை உள்ளவராகவும் அறிவித்திருக்கிறார். மூன்றடி மண் கேட்ட வாமனன் கதை, கற்பனையாக இருந்தால் கூட, விண்ணுக்கும் மண்ணுக்கு ம் அளந்து பிரமாண்டத்தை, பிரபஞ்சத்தை அளக்கச் சொல்கிறது.   அது கற்பனையின் எல்லையை விரிவாக்குகிறது. இவர் 1925 வரைதான் உயிருடன் இருந்தார் என்பதால் 1969-ல் மனிதன் நிலவில் கால் வைத்துவிட்டது தெரியாமல் போய்விட்டது. கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே பூமிக்கு வெளியே இடம் கேட்ட ஆர்க்கிமிடீஸ் வாழ்ந்திருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கக் கூடும். தனது தந்தையின் அதிகார கட்டுப்பாட்டிலேயே வளர்ந்த காலகட்டங்களில் இப்படியொரு எண்ணம் தோன்றியிருக்கலாமோ?