இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-39

படம்
காஃப்கா நுண்மொழி -39 “ தீமைக்கான விலையை ஒருவன் அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்க முடியாது . ஆனாலும் அவன் தொடர்ந்து முயன்று கொண்டேதான் இருக்கிறான் . மாவீரன் அலெக்சாண்டர் தன்னுடைய இளமைக்கால வெற்றிகள், அவன் உருவாக்கிய பிரம்மாண்டமான போர்ப்படை , இந்த உலகை மாற்றி விடுவதற்கான ஆற்றல் கொண்ட உத்வேகம் , யாவும் இருந்தும்கூட அவன் ஹெலஸ்பாண்ட் என்ற கால்வாயை கடக்காமல் தனது பயணத்தை நிறுத்தி இருப்பார் என்பது யூகிக்கத் தக்கது . அது அவனுடைய பயத்தினால் அல்ல, திடமற்ற     முடிவினால் அல்ல, பலவீனத்தினாலும் அல்ல ஆனால்   அவனுடைய சோர்ந்த கால்களினால் கூட இருக்கலாம் .” என் எண்ணம் : தீமைக்கான விலையை நாம் அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்க முடியாது என்று சொல்லும்போது பாவத்தின் சம்பளம் மரணம் என்கிற பைபிள் சொற்றொடர் நினைவுக்கு வருகிறது . அப்படி என்றால் தீமைக்காண விலை என்பது மொத்தமாக நாம் கொடுக்கப் போகிற மரணம் என்று பொருள்படுகிறது . ஒவ்வொரு தீமைக்கும் அவ்வப்போது விலைகொடுத்து நாம் அதை சரி செய்துவிட முடியாது , முதலிலேயே மொத்தமாக கொடுப்போம் என்று காஃப்கா சொல்கிறார் .   அதாவது ஒருவன் தீமையின் பயனால் தொடர்ந்து மூழ

காஃப்கா நுண்மொழி-38

படம்
காஃப்கா நுண்மொழி -38     நித்தியத்தை அடைவதற்கான பாதை இத்தனை எளியதா என்று ஆச்சரியப்பட்டான் ஒருவன் .   ஏனென்றால் , அவன் மலையிறக்கப் பாதையில் வேகமாய் பயணித் திருந்தான். என் எண்ணம் : நித்தியம் என்றால் என்ன ? நம்மில் பலர் சில இரங்கல் கடிதங்கள் எழுதியிருப்போம் .   அவற்றில் , “I pray to God to rest his peace at eternal peace” என்பது ஒரு சொற்றொடர் .   இந்த eternal peace நிரந்தர அமைதியை குறிக்கிறது . நிலையாமையை பேசும் நமது தத்துவங்கள் தான் நித்தியத்தையும் பேசுகின்றன .   இம்மையில் இருக்கிற நிலையாமை என்பது நிதர்சனம் .   ஆன்மீகத்தில் நித்தியம் குறித்த நம்பிக்கை இருக்கலாம் .   பொதுவாக ஒரு நடப்பு சாத்தியமுள்ள வாழ்வியல் முறையில் நித்தியம் என்பது ஒரு மாயை தான் . நமது கடிகாரங்களாலும் , நாட்காட்டிகளாலும் கணக்கிடப்பட முடியாதது நித்தியம் என்கிறார்கள் . என்னை பொறுத்தவரையில் , அனுபவ பூர்வமாக , பொருள் புரிந்து ‘ இதுதான் நித்தியம் ’ என்று என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை .   நித்தியம் என்கிற மாயையை உணர்ந்து கொண்டவர்கள் யாராவது இருக்க முடியுமா என்ன ?   அது கடவுளை உணர்ந்து கொண்டேன் என்று சொல்வது ப
படம்
காஃப்கா நுண்மொழி -37 இல்லாத ஏதோ ஒன்றை அவன் வைத்திருந்தான் என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போது அவனிடம் தடுமாற்றமும் நடுக்கமும் இருந்தது . என் எண்ணம்     ‘இல்லாத ஏதோ ஒன்றை அவன் வைத்திருந்தான்’ என்று கூறும் போது நுண்மொழி-35 லிருந்து தொடர்பு படுத்தி பார்க்க வேண்டியிருக்கிறது.   ‘‘வைத்திருத்தல்’ என்று ஏதும் இல்லை ‘இருத்தல்’ மட்டுமே ஏக்கம்” - என்பது தான் முந்தைய மொழி.   ‘இருத்தல்’ என்பதே ஏக்கம் ஆகிவிட்ட ஒருவனிடம், அவன் இல்லாத ஒன்றை வைத்திருந்தான் என்று குற்றம் சாட்டுவது, அவனிடம் தடுமாற்றத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்கிறார்.    ‘இருத்தல்’ மட்டுமே ஆகிவிட்ட, கடைசி மூச்சிற்கு ஏங்குகிற ஒரு கால கட்டத்தில், அதாவது முற்றும் துறந்துவிட்ட ஒரு மனநிலையில், அவன் ’ஏதோ வைத்திருந்தான்’ என்று இல்லாத ஒன்றைக் கூறும் போது, அவன் தவறு செய்தவன் போல் தடுமாறுகிறான், அவன் உடல் நடுங்குகிறது என்கிறார் காஃப்கா.   இந்த நுண்மொழியில் முதன் முறையாக, ஒரு உடல் சார்ந்த (புறம் சார்ந்த) பின் விளைவை எழுதியிருக்கிறார் காஃப்கா.   அவன் தனது இருத்தலுக்கு ஏதாவது பங்கம் வந்துவிடுமோ என்று பயந்ததால் ஏற்பட்ட தடுமாற

காஃப்கா நுண்மொழி-36

படம்
காஃப்கா நுண்மொழி -36     முன்பெல்லாம் நான் கேட்ட கேள்விகளுக்கு ஏன் பதில் கிடைப்பதில்லை என்று புரிந்ததில்லை .   இப்போது அத்தகைய கேள்விகளை எந்த தைரியத்தில் கேட்டேன் என்றும் புரியவில்லை .   ஆனால் நான்தான் கேட்டேனா என்பதையும் நம்பமுடியவில்லை .   என் எண்ணம்     இளைய வயதில் , இப்படித்தான் தோன்றியவற்றை துடுக்குத்தனமாக கேட்டுவிடுகிறோம் .   பிறகு வயதும் முதிர்ச்சியும் ஏற ஏற , எப்படி இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனமான கேள்விகளை கேட்டோம் என்றும் தோன்றுகிறது .   நம் அசட்டுத்தனம் குறித்தும் ஆச்சரியப்படுகிறோம் .     படிப்பு முடிந்த கையோடு ஒரு தனியார் அலுவலகத்தில் வேலையிலிருந்தேன். இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி இரண்டு வயதிருக்கலாம்.   ஆண்களுக்கான அறையில் நிறைய கிசுகிசுக்கள் பேசிக்கொள்வது வழக்கம்தானே.   அப்போது காமம் சார்ந்த ஒரு குறியீட்டு வார்த்தையை தெரிந்துகொண்டேன்.   அடுத்த ஒன்றிரண்டு நாளில் ஒரு நண்பன் அலுலவகத்தின் கூடத்தில் வைத்து என்னை கிண்டல் செய்துவிட்டான்.   ‘பிலக்கா பையன், இன்னம் மீசை கூட முளைக்கலை, உனக்கென்னடா தெரியும்’ என் று சீண்டிவிட்டான்.   அந்தக் கூடத்தில் ஆண்களும் பெண்களுமாக ஒ

காஃப்கா நுண்மொழி-35

படம்
காஃப்கா நுண்மொழி-35 “பேறு என்றெதுவும் இல்லை, ‘இருத்தல்’ மட்டுமே.   கடைசி மூச்சிற்கும், மூச்சு திணறலுக்கும் ஏங்கும் ‘இருத்தல்’ மட்டுமே.” என் எண்ணம்:     மனிதன் வாழ்நாள் முழுவதும், பொருள் வளத்தை மேம்படுத்திக் கொள்ளவும், அதனால் பல விஷயங்களை தனது ‘உடைமை’ யாக்கிக் கொள்ளவும் பெருமுயற்சி எடுக்கிறான்.   செல்வப் பேறு மட்டும் அல்ல, நல்ல பெயர், புகழ்ச்சி, புண்ணியம், சுற்றம் என்று எல்லாவற்றிற்கும் போராடுகிறான்.   ஆனால் ஒரு கட்டத்தில், உடல் நலமற்றுப் போய், உடலுடன் போராடி, உயிருடன் போராடி சிரமம் தாங்காமல் எப்போது மரணம் தழுவும் என்று ஏங்கும் போது, ‘பேறு’ என்று எதுவும் இல்லை, இருத்தல் மட்டுமே தொடர்கிறது.   அப்போதைய ஏக்கம், கடைசி மூச்சிற்கானதாகவும், மூச்சுத் திணறலுக்கானதாகவும் இருக்கிறது.     முந்தைய நுண்மொழியில் எடுத்துரைத்த ‘அயர்ச்சி’யை தொடர்ந்து காஃப்கா இருத்தல் குறித்து பேசுகிறார். அந்த அயர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட விரக்தியில் இந்த நுண்மொழி தோன்றியிருக்கலாம். ‘இருத்தலின்’ நோக்கம் ‘இல்லாமல் போவது’ என்று நேரிடையாக புரிந்தாலும்,   கடைசி மூச்சிற்கான ஏக்கம் என்பது, கடைசி மூச்சுவரை ‘இருத்தலி’ன்

காஃப்கா நுண்மொழி-34

படம்
காஃப்கா நுண்மொழி-34   “தனது அலுவலகத்தின் ஒரு மூலையில் வெள்ளையடித்துவிட்டு அவன், போருக்குப் பின்னான ஒரு தளபதியைப் போல் அயர்ந்துவிடுகிறான்”   என் எண்ணம்:     நானும் பார்த்திருக்கிறேன்.  நான் பார்க்கிற வேலைதான் மிகுந்த கடினமானதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இருக்கிறது என்று இறுமாந்ததுண்டு.  அதே நேரம் உடன் இருக்கிற (சும்மாவே இருக்கிற) சக, கீழ் நிலை ஊழியர்களும் தங்களது வேலைதான் சிரமம் நிறைந்தது என்று அலுத்துக் கொள்வார்கள்.  சும்மா இடுப்பில் கைவைத்துக் கொண்டு மேஸ்திரி வேலை பார்க்கிற மேலதிகாரிகளும் அதே போல்தான் அலுத்துக் கொள்கிறார்கள்.     உங்களுக்கென்ன, மாசம் பொறந்த சம்பளம், நாங்க அப்படியா ஓடியாடி உழைச்சாதான் காசு பாக்கமுடியும் என்று அலுத்துக்கொள்ளும் நண்பர்களும் உண்டு.     வெள்ளையடிக்கிற மனிதனின் அயர்ச்சியும் நியாயமானதுதான்.  அவனது உழைப்பும் அயர்ச்சியும் யாராலும் பாராட்டப்படுவதில்லை.  ஒருவனது உழைப்பு என்று சொல்லும் போது அது போர்வீரனின் உழைப்பிற்கு இணையானதுதான்.  இருவரும் உழைக்கிறார்கள்.  ஆனால் ஒருவனது உழைப்பு எந்த மாற்றத்தையும், விளைவையும் தருவதில்லை. அவனது உழைப்பு நின்று போனாலும்
படம்
காஃப்கா நுண்மொழி -33     “தியாகிகள் தங்கள் உடலை குறைத்து மதிப்பிடுவதில்லை.   அவற்றை சிலுவையில் ஏற்றவும் மறுப்பதில்லை. இவ்வகையில் அவர்கள் தங்கள் எதிராளிக்கும் ஒப்பானவர்கள்”   என் எண்ணம்:     காந்தியின் சத்தியாகிரஹங்களும், உண்ணாவிரத போராட்டங்களும் நினைவிற்கு வருகிறது.   தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதன் மூலம் எதிரியை பணிய வைக்கும் தந்திரம்.    தங்கள் நோக்கங்களை அடைவதற்காக அவர்கள் சிலுவையேறவும் தயங்குவதில்லை.   தங்கள் உடலை துன்புறுத்துவதன் மூலம் அவர்கள் எதிராளிக்கு ஒப்பானவர்கள் என்கிறார் காஃப்கா.    நுண்மொழி 29-ஐ இவ்விடத்தில் சேர்த்து சிந்திக்க வேண்டியிருக்கிறது,     “ தனது எஜமானனைப் போலாக வேண்டும் என்று , அவன் கரத்திலிருந்து சவுக்கைப் பிடுங்கி தன்னை தானே அடித்துக் கொள்ளும் மிருகம் – பாவம் அதற்குத் தெரியாது , அந்த சவுக்கிலிருக்கிற புதிய முடிச்சு செய்யும் ஜாலம் இதுவென்று .”     தியாகி – எதிராளி என்ற இரண்டு துருவங்களை, நன்மை – தீமை இவற்றோடு ஒப்பிடும் போது,    தீமையை வெல்ல தன்னைத் தானே நன்மை துன்புறுத்திக் கொள்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்தானே!     சொல்லப் போனால், எளிமை