இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண்ணே !

நான் ஆணாய் பிறந்தது வெட்கம்   கோரப்பற்களும்   கொடூர நகங்களும் குருதி சொட்டும் நாவும் குத்திக் கிழிக்கும்   கொடுங்கோளும் கொண்டு   சதை தேடி சதை தேடி   பசியாறா பிணந்தின்னி   சாகும் வரை சதை வேண்டும். காமக் கண்களும் கற்பழிக்கும்   காமிரா கண்களும் எரியூட்டும் சேலைக்குள் ஊடுருவும் கண்கள் துகிலுரியத் துடிக்கும் மனசு   அது எவளாயினும்   எனக்கு வேண்டும். உடன் பிறந்தவள் தவிர்த்து   யாரும் இல்லை சகோதரி என்று   இறுமாப்பு பேச்சிலும்   காமம் தூக்கும். பணமும் புகழும் காட்டி   பசியோடிருக்கும் மாதவியரை   பந்தி வைத்து படம்காட்டி   விலை மாதர் எனச்சொல்லும்   வியாபாரி விலை மகன் விந்துற்பத்திக்கு தீனியிட்டான். உடல் திராணியற்று போயினும்   உள்ளம் ஆண் வக்கிரமாகவே தொடரும்   ஆண்   ஆணாக இருக்கும் வரை   உயிரியல்   உடல் மாறாதவரை   உள்ளம் மாறுவதில்லை   மாற்றுவோர் யாரும்   இல்லை. உனக்கான என் பரிதாபங்களும்   பட்சாதாபங்களும் நான் வேறொரு பெண் மேல்   காமுறு வரைதான். வாய்ப்பிருந்தால் யாருடனும் சுகிக்கவே   துடிக்கிற ஆண். இந்த சமூக வில

Peacocks

படம்
இது என்னுடைய முதல் oil   painting என்று சொல்லலாம்.  Youtube-ல் ஆய்ந்து கொண்டிருந்தபோது 'Dry  Brush Technique ' பார்க்க நேர்ந்தது.  இது, முதல் முயற்சி. இந்தப்படத்தை சுழற்றுவது எப்படி ? தெரிந்தவர் சொல்லுங்களேன்.

தர்மபுரித் தீ

தர்மபுரித் தீ ! மரங்கள் எரிகிறது  மனிதர்கள் சாம்பல்  குடிசைகள் கரி  கோப்புகள் மாயம்  குட(ழ)ந்தைகள் கோரம்  கிடங்குகள் நாசம்  லங்கா தகனம்  மிஞ்சா வாகனம்  சிலம்பில் பிரளயம்  விஞ்சியது ஏதுமில்லை  ஊழிக்குப்பின்னும்  மனங்கள் மட்டும்  நெய் ஊற்று  இனங்கள் கொள்ளி  எரிந்துகொண்டே இருக்கும்  எளியோரின் இருப்பு.